இன்றைய ராசி பலன்(24-09-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு உயர் அதிகாரிகளின் வழியாக சிறு சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் ஒரு சிலர் உங்களை புரிந்து கொண்டு நடக்காமல் இருக்கலாம்.

ரிஷபம்:

ஒரு சிலருக்கு இன்று வேலை தொடர்பாக சில மன அழுத்தங்கள் உண்டாகலாம். உங்கள் நண்பர்களிடம் நீங்கள் கவனமாக பழக வேண்டும். வெளியூர் பயணத்தில் சில ஆதாயம் பெறுவீர்கள்.

மிதுனம்:

ஒரு சிலருக்கு இன்று வம்பு வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். குடும்பத்தில் நீங்கள் உங்களுடைய சுயமான முடிவை எடுப்பதால் மட்டுமே வருகின்ற பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

கடகம்:

உங்கள் வீடுகளில் சிலர் உங்களைப் பற்றி தவறாக பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அத்தை வழி உறவுகளால் ஒரு சிலர் சிக்கல்களை சந்திப்பீர்கள். மதியம் மேல் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்:

ஒரு சிலர் வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பார்கள். காலை முதல் மனம் பதட்டத்துடன் காணப்பட்டாலும் மாலை பிறகு நிதானத்தை கடைப்பிடித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

இறைவன் நம்மை நெருங்குகிறார் என்றால் சோதனைகள் வருவது உண்மைதானா ?

இறைவன் நம்மை நெருங்குகிறார் என்றால் சோதனைகள் வருவது உண்மைதானா ?

கன்னி:

முடிந்த வரை இன்று உங்கள் வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. சொந்தங்கள் வழியாக உங்களுக்கு நற்செய்தி வந்து சேரலாம். கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

மனதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி உண்டாகும். சிலர் படிப்பில் அதிக கவனமும் ஆர்வமும் செலுத்துவார்கள். தங்களுடைய திறமையை பாராட்டி சில முக்கிய பரிசுகளை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு எதிர்காலத்தை பற்றிய ஒரு சில பயம் உருவாகலாம். பிள்ளைகள் மீது அக்கறை செலுத்த வேண்டும். இறைவழிபாடு நன்மை அளிக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு:

இன்று உங்களுக்கு பிடித்த வேலையை செய்து மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு உடல்நிலை காரணமாக மருத்துவரை சந்திக்க நேரலாம். உணவு விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்:

காலை முதல் நீங்கள் செய்யும் வேலைகளில் சில தடைகள் உருவாகலாம். இன்று முக்கியமான பணிகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. கண் தொடர்பான பிரச்சனையை சந்திக்கலாம்.

கும்பம்:

இன்று முடிந்த வரை தொலைதூர பயணத்தை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத வம்பு வழக்குகள் வர வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருப்பதால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

மீனம்:

இன்று நீங்கள் தற்பெருமை பேசுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US