இன்றைய ராசிபலன் (22-08-2025)
மேஷம்:
இன்று நீங்கள் முடிந்தவரை குடும்பங்களுடன் கலந்து முக்கியமான முடிவுகளை எடுப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும். வியாபாரத்தை பற்றிய குழப்பங்கள் மனதில் உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் அவசியம். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய நட்புகளின் அறிமுகத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்:
ஒரு சிலருக்கு இன்று மனதில் சில கவலைகள் ஏற்படும். சிலர் சில தவறுகளை செய்து சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தாயிடம் மிக கவனமான முறைகள் பழக வேண்டும்.
கடகம்:
உடல் சோர்வு ஏற்படும். கணவன் வழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவை பெரும். அரசியல்வாதிகளுக்கு பொன்னான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்:
இன்று தேவையில்லாத பழக்க வழக்கங்களால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்கள் குடும்பத்தை பற்றிய முக்கிய தகவல்களை வெளியே சொல்வதை தவிர்க்க வேண்டும். இறை வழிபாடு அவசியம்.
கன்னி:
இன்று சிலர் வேலை மாற்றங்களை பற்றி யோசிப்பீர்கள். நினைத்த இடத்தில் வேலை கிடைக்க தாமதமானாலும் நல்ல முடிவை பெறுவீர்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு பொன்னான நாள்.
துலாம்:
இன்று மன குழப்பங்கள் விலக கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யலாம். வெளியில் செல்லும் பொழுது கவனம் அவசியம். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதத்தை செய்யாதீர்கள்.
விருச்சிகம்:
சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகலாம். கணவன் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். தந்தை உடல் நிலையில் சில தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
தனுசு:
பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் விலகும். பிள்ளைகள் எதிர்கால பற்றிய கூடுதல் பொறுப்பு உங்களுக்கு சில கவலைகளை கொடுக்கலாம்.
மகரம்:
வீண் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உடன்பிறந்தவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தை செய்யாதீர்கள். கோபத்தை குறைத்துக் கொண்டால் அலுவலகத்தில் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும்.
கும்பம்:
ஆடம்பர செலவுகளை குறைப்பதாலே குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையிடம் ஆலோசனை பெற்று சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். எதிர்பார்த்தது நடக்கும் நாள்.
மீனம்:
வழக்கு விஷயங்களில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதி உண்டாகும். விருந்தினர் வாழ்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







