இன்றைய ராசி பலன்(10-09-2025)
மேஷம்:
இன்று காலை முதல் உடலில் சிறு சிறு தொந்தரவுகள் சந்திக்கலாம். வருமானத்தில் சந்தித்த தடைகள் யாவும் விலகும். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
வயிற்று வலி மற்றும் வயிறு தொடர்பான கஷ்டங்கள் வரலாம். உறவினர்கள் வழியே சில முக்கியமான நபரை சந்திக்கும் நிலை உண்டாகும். நன்மையான நாள்.
மிதுனம்:
தெரியாத நபர்களின் வழியாக உங்களுக்கு சில மன கசப்புகள் வரலாம். முடிந்த வரை உங்களின் சொந்த வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை அளிக்கும்.
கடகம்:
இன்று மனதில் தேவை இல்லாத சங்கடத்தை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு வாழ்க்கையில் சந்தித்து வரும் பொருளாதார கஷ்டங்கள் விலகும். தந்தை வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்:
அரசாங்க பதவியில் இருக்கும் நபர்களுக்கு சில முக்கியமான பதவிகள் கிடைக்கலாம். வருமானத்தில் சில தாடைகள் சந்திக்க நேரலாம். வியாபாரத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம்.
கன்னி:
கல்லூரி மாணவர்கள் சிலர் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை உங்கள் திருமண வாழ்க்கையை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம்.
துலாம்:
இன்று உங்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். உறவினர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். தாய் மாமன் வழி உறவால் உங்களுக்கு சில நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம்:
தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு:
இன்று உங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிலருக்கு சில சிக்கல் மதியம் வரை இருக்கலாம்.
மகரம்:
முடிந்த வரை உங்களின் வேலையில் இன்று முழு கவனத்தை செலுத்துங்கள். வெளியூர் செல்லும் நபர்கள் உங்கள் உடமைகளை கவனமாக வைத்து கொள்ளுங்கள். நன்மையான நாள்.
கும்பம்:
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
மீனம்:
தொலை தூர பயணம் செய்பவர்கள் இன்று பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







