நாளைய ராசி பலன்(18-09-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கியமான முடிவு எடுக்க தள்ளப்படுவார்கள். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். வருவதை ஏற்றுக் கொள்வீர்கள்.

ரிஷபம்:

இன்று ஒரு சிலருக்கு அதீத உடல் சோர்வு காணப்படும். முடிந்தவரை உடலுக்கு ஓய்வும் மனதிற்கு அமைதியும் கொடுக்க வேண்டிய நாள். முக்கியமான வேலைகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:

இன்று நீங்கள் உங்கள் தாயிடம் சில வாக்குவாதங்கள் செய்வீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத சிக்கல்கள் வரும். ஒரு சிலர் வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

கடகம்:

காலையிலிருந்து மனம் சற்று பதட்டமாகவே காணப்படும். வேலை பளு அதிகரிக்கும். கணவனின் துணையால் ஒரு முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

சிம்மம்:

குடும்பங்களுடன் சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள். உங்களின் ஆளுமை பண்பு வெளியாகும். சிலர் உங்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். நன்மையான நாள்.

கன்னி:

ஒரு சில விஷயங்களை செய்யாமல் தவிர்த்து இருக்கலாம் என்று மனம் வருந்துவீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபட கோவில் வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.

கிரகங்கள் கொடுக்கும் துன்பத்திலிருந்து மீண்டு சாதனை புரிவது சாத்தியமா?

கிரகங்கள் கொடுக்கும் துன்பத்திலிருந்து மீண்டு சாதனை புரிவது சாத்தியமா?

துலாம்:

இன்று மூன்றாம் நபரால் சில எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க நேரும். எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்து வைத்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்:

இன்று உங்களுடைய பொறாமை மற்றும் போட்டி குணத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் உருவாகலாம். கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு:

உங்கள் பிள்ளையைப் பற்றி பெருமை அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த செய்தி ஒன்று வந்து சேரும். தாயுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். நன்மையான நாள்.

மகரம்:

வீண் வம்பு வழக்குளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத வார்த்தைகளால் சில சங்கடமான நிலை உருவாகலாம். மனதில் அமைதி காக்க வேண்டிய நாள்.

கும்பம்:

இன்று உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் சில மனக்கசப்புகள் உண்டாகும். தொலைதூர பயணம் மேற்கொள்ள நேரும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

இன்று ஒரு சிலர் பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரலாம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்காமல் போகலாம். இறைவழிபாடு அவசியம் ஆகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US