இன்றைய ராசி பலன்(20-04-2025)
மேஷம்:
குடும்பத்தில் உண்டான சங்கடங்கள் எல்லாம் விலகும். எந்த ஒரு விஷயங்களையும் தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். உங்களின் முக்கியமான சில தகவல்களை பிறரை நம்பி பகிர வேண்டாம்.
ரிஷபம்:
இன்று மனதில் அதீத குழப்பம் உண்டாகும். நேற்று வரை சந்தித்த பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். மதியம் மேல் நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
மிதுனம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் பிரச்சன்னை உருவாகும். குடும்பத்தில் தேவை இல்லாத விஷயங்களை பற்றி பேச வேண்டாம். மூன்றாம் நபரால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்.
கடகம்:
இன்று மனதில் ஆழந்த சிந்தனை தோன்றும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். உங்களுக்கான எதிரிகள் தொல்லை விலகும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்:
எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
கன்னி:
இன்று குடும்பத்தில் உங்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பால் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
மனதில் இறை சிந்தனை மேலோங்கும். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு விலகும். பிறரிடம் உதவி என்று கேட்டால் நடக்காமல் போகலாம். வெளியூர் பயணம் ஆதாயம் கொடுக்கும்.
விருச்சிகம்:
செயல் லாபமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்.
தனுசு:
மனதில் நீண்ட நாள் இருந்த கவலை விலகும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் முற்றிலுமாக விலகும். கோயில் வழிபாட்டில் பங்கு கொள்வீர்கள். மதியம் மேல் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மகரம்:
மதியம் வரை நெருக்கடிக்கு ஆளானாலும் அதன்பிறகு நினைத்தது நிறைவேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
கும்பம்:
வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்குள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். போட்டியளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
மீனம்:
மூன்றாம் நபரை நம்பி எந்த ஒரு செயலையும் செய்யவேண்டாம். பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மை தரும். மனைவி வீட்டு உறவினர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |