திருப்பதி பெருமாளுக்கு இந்த இரண்டு பொருட்கள் ஆகவே ஆகாதாம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Sep 24, 2026 11:58 AM GMT
Report

திருமலை திருப்பதியில் வீற்றிருக்கக் கூடிய வெங்கடேச பெருமாள் என்றாலே நம் மனதிற்கு ஒரு மகிழ்ச்சியும் ஆனந்தமும் வருகிறது. அந்த வகையில், அவரை நினைத்தாலே முதலில் நமக்கு நினைவிற்கு வருவது அவருடைய அலங்கார திருக்கோலம் தான். திருமால் அலங்காரப் பிரியர் என்று எல்லோரும் அறிந்து இருப்போம்.

அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய பணக்கார கோயிலான திருமலையில் செய்யப்படும் ஸ்ரீனிவாச அலங்காரம் உலகப் புகழ்பெற்றது. அங்கு இருக்கக்கூடிய ஆபரணங்களை பொறுத்தவரை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தினமும் 65 முதல் 70 கிலோ தங்கம் வரையிலான தங்கு ஆபரணங்களை சூடப்படுகின்றன.

திருப்பதி பெருமாளுக்கு இந்த இரண்டு பொருட்கள் ஆகவே ஆகாதாம் என்ன தெரியுமா? | Two Things Lord Venkateswara Accepts In Tirumala

2026 அக்டோபர் முதல் துர்கா தேவியின் அருளால் வெற்றியின் உச்சம் தொடும் ராசிகள் யார்?

2026 அக்டோபர் முதல் துர்கா தேவியின் அருளால் வெற்றியின் உச்சம் தொடும் ராசிகள் யார்?

மலர்களும் வாசனை திரவியங்களும் மட்டுமே பல லட்சம் ரூபாய் வருகிறது. ஸ்பெயின் நாட்டிலிருந்து குங்குமப்பூ, சீனத்துப் புனுகு, நேபாளத்திலிருந்து கஸ்தூரி மைசூரின் சந்தனம் தமிழகத்து பச்சை கற்பூரம் என உலகெங்கிலும் இருந்து இவருக்கு வாசனை திரவியங்கள் வருகிறது.

இவ்வாறு எல்லா மலர்களும் வாசனைப் பொருட்களும் எம்பெருமானை வந்து அடைந்தாலும் அவர்கள் இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் ஆகவே ஆகாதாம். அது தான் கருவேப்பிலையும் கனகாம்பரமும். இது ஸ்ரீனிவாசனின் பயன்பாட்டிற்கு வருவதே இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மகா முனிவரும் கோபத்துக்கும் சாபத்துக்கும் மிகவும் பெயர் பெற்றவராக இருக்கக் கூடியவர் துர்வாசர். ஒருமுறை வைகுண்டத்திற்கு சென்ற போது திருமாலின் திரு மார்பில் எட்டி உதைத்ததாக புராணக் கதை கூறுகிறது. திருமாலின் திரு மார்பில் வாசம் செய்யக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவரும் அறிந்திருப்போம்.

திருப்பதி பெருமாளுக்கு இந்த இரண்டு பொருட்கள் ஆகவே ஆகாதாம் என்ன தெரியுமா? | Two Things Lord Venkateswara Accepts In Tirumala

சில சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்காமல் ஏன் வேறு திசையில் அமர்ந்திருக்கிறார்?

சில சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்காமல் ஏன் வேறு திசையில் அமர்ந்திருக்கிறார்?

அவர் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்து விடுகிறாள். திருமகளை இழந்த திருமால் தனது செல்வங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுகிறார். பிறகு திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாச மூர்த்தியாக பூமிக்கு வருகிறார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் நேரத்தில் பத்மாவதி தேவியை ஸ்ரீனிவாசர் சந்திக்கிறார்.

பிறகு அவளையே மணந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். ராம அவதாரத்தில் தோன்றி சீதா தேவியின் இன்னல்களை எல்லாம் தாங்கிக் கொண்ட தியாகத்தை போற்றும் வகையில் கலியுகத்தில் அவர் ஸ்ரீனிவாசனாக அவதரிக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். ராமபிரான் அந்த வேத வரி தான் ஆகாச ராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருக்கிறார்.

தாம் முன்னர் அவளை மணந்து கொள்வதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஸ்ரீனிவாசர் பத்மாவதியை மணந்து கொள்கிறார். ஒரு பெரிய மன்னரின் மகளை மணந்து கொள்ள வேண்டும் என்பதால் திருமணத்தை மிக விமர்சையாக செய்ய விரும்புகிறார் ஸ்ரீனிவாசர்.

குபேரனிடம் ஒரு கோடியை 14 லட்சம் பொன் வராகன்களை கடனாக பெறுகிறார். தான் பெற்ற கடனுக்கு கலியுகம் முடியும் வரை வட்டி செலுத்துவதாகவும் அவர் வாக்களிக்கிறார்.

குபேரனிடம் பெற்ற நிதியை கொண்டு நாரதரும் வகுளாதேவியும் ஸ்ரீனிவாச பத்மாவதி திருக்கல்யாணத்தை மிக விமர்சையாக நடத்தினர்.

திருப்பதி பெருமாளுக்கு இந்த இரண்டு பொருட்கள் ஆகவே ஆகாதாம் என்ன தெரியுமா? | Two Things Lord Venkateswara Accepts In Tirumala

2026: அக்டோபர் மாதம் கன்னி ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

2026: அக்டோபர் மாதம் கன்னி ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

ஆனால் திருமணம் என்றால் ஏதேனும் ஒரு தகராறு வரும் அல்லவா? தெய்வ திருமணம் என்றால் மட்டும் அது விதிவிலக்கு அல்ல. எந்த குறையும் இல்லாமல் ஸ்ரீநிவாசர் பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும் கழகம் ஏற்படுத்தும் வகையில் நாரதர் ஒரு செயலை செய்துவிட்டார்.

தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்த குறையுமே இல்லை என்று இருந்த வகுளாதேவியின் கர்வம் உடைக்க நினைத்த நாரதர் பத்மாவதி தாயாரிடம் சென்று திருமணத்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கவில்லை என்று தெரிவிக்கிறார். அவ்வளவுதான் திருமணத்திற்கு பின்னர் இது தொடர்பாக பெருமாளுக்கும் பத்மாவதிக்கும் சண்டை உண்டாயிற்று.

இந்த சண்டை பெரிதாகி பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூர் அடைந்து தனக்கு தனி கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் திருமலை ஆலயத்தில் எந்த விதத்திலும் கனகாம்பரம் மலரையும் கருவேப்பிலையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள். ஒன்றுக்கு இரு தேவியர்களை சீனிவாச பெருமாள் பெற்றிருந்தாலும் திருமலையில் தனித்தே இருக்கிறார்.

பெருமாள் ஒரு காரியம் நடத்துகிறார் என்றால் நிச்சயமாக அதில் ஒரு காரணம் இருக்கும். மேலும், பெருமாள் தனியாக திருமலையில் இருப்பதே பக்தர்களை கண்ணும் கருத்துமாக பார்ப்பதற்காகவே என்ற புராணங்களும் ஆன்மீக பெரியவர்களும் சொல்லி இருப்பது உண்மை என்று தோன்றுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US