வீட்டில் இந்த திசையில் காலண்டர் மாட்டி இருந்தால் உடனே அதை அகற்றி விடுங்கள்
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக, வாஸ்து ரீதியாக நம்முடைய வீட்டில் காலண்டரை ஒரு குறிப்பிட்ட திசையில் தான் மாட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
காலண்டர் என்பது அனைவரது வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று. அதை நாம் கட்டாயமாக சரியான திசையில் மாட்ட வேண்டும். அவ்வாறு மட்டும் பொழுது வீட்டில் அமைதி நிலவி அதிர்ஷ்டம் உருவாகும் என்கிறார்கள்.
அந்த வகையில் வாஸ்து ரீதியாக காலண்டரை கிழக்கு திசையில் மாட்ட, புதிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும். அதாவது, சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, அவை நம்முடைய வளர்ச்சியை குறிக்கிறது. ஆக, கிழக்கு திசையில் மாட்ட நம் வாழ்க்கையின் இலக்குகளை அடைய உதவியாக அமையும் என்கிறார்கள்.
அடுத்ததாக, வடக்கு திசையில் காலண்டரை மாட்டும் பொழுது, நிலைத்தன்மை, செழிப்பைக் குறிக்கிறது. இவ்வாறு வடக்கு திசையில் மாட்டும் பொழுது நாம் தொழில் நல்ல வளர்ச்சியை பெறலாம் என்கிறார்கள்.
மேலும், நம்முடைய மன அமைதி, ஆன்மீக சிந்தனை பெறுக காலண்டரை வடகிழக்கு திசையில் மாட்டுவது சிறந்த பலன் கொடுக்கும். ஆன்மீக விழிப்புணர்வின் திசையான வடகிழக்கு, ஒரு தனி நபரின் வளர்ச்சியை குறிக்கும்.
அதே போல், வீடுகளில் உள்ள உறவுகளை வலுவாக்க தென்மேற்கு திசையில் காலண்டரை மாட்டுவது சிறந்த பலன் அளிக்கும். காதல், உறவுகளின் திசையான தென்மேற்கு, அரவணைப்பு, இணைப்பைக் குறிக்கிறது.
இவ்வாறு, தென்மேற்கு திசையில் காலண்டரை மாட்டும் பொழுது வீட்டில் உள்ள உறவுகள் மேம்படும். ஆக, ஒவ்வொரு திசைக்கு ஏற்ப நாம் காலண்டர் மாட்டும் பொழுது வீடுகளில் மாற்றம் அதற்கு ஏற்ப நிகழ்கிறது.
அதே சமயம் தவறான திசையில் காலண்டர் மாட்டும் பொழுது வீட்டில் எதிர்மறை ஆற்றல் சூழ வாய்ப்புள்ளது. ஆக, சரியான திசையை தேர்வு செய்வது அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |