உங்களுக்கு இந்த தேதியில் தான் மரணம்? என்று துல்லியமாக கணிக்கும் அதிசய கோயில்
இந்த உலகத்தில் நம்மை நிறைய விஷயங்கள் ஆச்சரிய படுத்தும் வகையில் இருக்கிறது. அதில் ஒன்றுதான் ஒரு மனிதனுடைய கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஏன் ஒருவருக்கு மரணம் கூட எப்பொழுது நிகழும்? எவ்வாறு நிகழும் என்று மிக துல்லியமாக கணித்து சொல்ல கூடிய ஒரு கோயில் நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கிறது.
இந்த கோவிலை பற்றி பலரும் தெரிந்திருப்போம். அப்படியாக இந்த கோவிலின் சிறப்புகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். மயிலாடுதுறை மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் ஆலயம் என்னும் சக்தி வாய்ந்த சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நாடி ஜோதிடம் விசேஷம் என்று பலரும் அறிந்திருப்போம்.
அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்காலத்தில் ஒருவருக்கு என்ன நடக்கும் என்பதை ஓலை சுவடிகளில் முனிவர்களாலும் ரிஷிகளாலும் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலான ஓலைச்சுவடிகள் அகத்திய மாமுனிவரால் எழுதப்பட்டது என்றே சொல்கிறார்கள்.

அதாவது ஒருவர் பிறப்பதற்கு முன்னதாகவே அந்த நபருடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று கணித்து வைத்திருக்கக் கூடியது என்று நம்முடைய ஜோதிடத்தில் ஆழமாக நம்பக்கூடியது. இதில் நமக்கு நிறைய கேள்விகள் வரலாம்?
அது எப்படி இந்த உலகத்தில் பல கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே அவருடைய தலைவிதையை எழுதி வைக்க முடியுமா என்று? அந்த குழப்பங்கள் எல்லாம் தீர முனிவர்கள் எழுதப்பட்டது தான் ஓலைசுவடிகள். அதுமட்டுமல்லாமல் இந்த நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு யாருக்கு பிராப்தம் இருக்கிறதோ?
அவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு மட்டுமே ஏடுகளிலும் எழுதப்பட்டும் இருக்கும். மற்றவர்களுக்கு இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு ஒருவருடைய கை ரேகை மட்டுமே போதுமானது.
அவருடைய கை ரேகையை கொண்டு அவருடைய பெயர், அவருடைய பெற்றோர்கள் பெயர், திருமணம் நடந்திருந்தால் கணவனுடைய பெயர், குழந்தைகள் இருந்தால் குழந்தைகளுடைய பெயர், எதிர்காலம் எப்படி இருக்கும்? நிகழ்காலத்தில் அவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?

கடந்த காலத்தில் அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி துல்லியமாக எடுத்துச் சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நாடி ஜோதிடத்தில் பல காண்டங்களாக அவர்கள் குறித்து நமக்கு வாழ்க்கையை எடுத்துச் சொல்கிறார்கள். இவற்றுள் ஆயுள் காண்டம் என்று ஒரு முக்கியமான ஒரு காண்டம் உள்ளது.
இதில் ஒருவருக்கு வாழ்நாளில் மரணம் எப்போது நிகழும்? அது எவ்வாறு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு நம்முடைய ரேகையை கொண்டு எடுத்து சொல்லக்கூடிய அந்த நாடி ஜோதிடமானது மிகத் துல்லியமாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் சிலருக்கு மிகப்பெரிய அளவில் தீங்குகள் இருக்கிறது என்றால் அவர்களுக்கான பரிகார பலன்களும் அவர்கள் எடுத்துரைப்பது உண்டு.
அப்படியாக வைத்தீஸ்வரன் ஆலயம் என்பது நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு மட்டும் என்ற விசேஷங்களை தாண்டி இங்க இருக்கக்கூடிய சிவன் கோவில் மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு வைத்தீஸ்வரன், வைத்தியநாத சுவாமி என்ற திருநாமங்கள் இருக்கிறது.
ஆக அவருடைய பெயராலேயே இந்த ஊர் வைத்தீஸ்வரன் கோவில் என அழைக்கப்படுகிறது. மேலும் வைத்தீஸ்வரன் என்றால் குணமாகக் கூடிய கடவுள் என்ற பெயர். அதாவது நீண்ட நாட்களாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தீராத நோய்களும் குழப்பங்களும் கொண்டிருப்பவர்கள் இங்கு இருக்கக்கூடிய வைத்தீஸ்வரன் ஆலயம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்ய நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நவகிரக பரிகார தலங்களில் இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய தலமாகவும் இருக்கிறது. இந்த கோவிலில் இருக்கக்கூடிய தீர்த்தத்தில் நீராடினால் நமக்கு பாவங்கள் மற்றும் தோல் வியாதிகள் போன்றவை உடனடியாக விலகும்.
அதோடு, இந்த கோயில் குளத்தில் வெல்லத்தை கரைத்து ஒருவர் வழிபாடு செய்ய அவர்களுக்கு உடலில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட வியாதியும் கரைந்து விடும். ஆக உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் இருக்கிறது என்றால் கவலை கொள்ளாமல் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.
கட்டாயம் நீங்கள் எதற்காக வருந்தி கொண்டிருக்கிறார்களோ அதற்கான ஒரு அற்புதமான விடையை இந்த ஆலயம் உங்களுக்கு கொடுக்கும்.
ஓம் நமச்சிவாய!
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |