மறந்தும் இந்த திசையில் மட்டும் தலை வைத்து உறங்காதீர்கள்
ஒரு மனிதனுக்கு எப்படி நல்ல உணவு எடுத்துக்கொள்வது அவசியமோ அதே அளவு தூக்கமும் மிகவும் முக்கியமானதாகும். நல்ல உறக்கம் கொண்டர்வர்கள் எதையும் நிதானமாக செய்வார்கள், உற்சாகமாக காணப்படுவார்கள்.
மேலும் நல்ல தூக்கம் பெற நாம் எதையும் அதிகம் சிந்திக்காமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாம் உறங்கும் திசையும் மிகவும் முக்கியமாகும். அப்படியாக எந்த திசையில் நாம் தலை வைத்து உறங்கினால் நல்ல தூக்கம் பெறலாம்? எந்த திசையில் நாம் மறந்தும் உறங்கக்கூடாது என்று பார்ப்போம்.
1. குழந்தைகள் உறங்குவதற்கு உரிய திசையாக கிழக்கு திசை இருக்கிறது. காரணம் கிழக்கு திசையில் தலை வைத்து உறங்கும் பொழுது நம்முடைய மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. இந்த திசையில் குழந்தைகள் மட்டும் அல்லாமல் தொழில் செய்பவர்கள், கணக்கு சம்பந்தமான வேலை செய்பவர்களும் இந்த திசையில் தலை வைத்து படுக்க நல்ல உறக்கம் பெற முடியும்.
2. தெற்கு திசையில் தலை வைத்து படுப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். தெற்கு திசையில் தலை வைத்து வடக்குப்பக்கம் கால் நீட்டி படுத்தால், கண்டிப்பாக நம்முடைய தூக்கம் மிகவும் நிம்மதியாக இருக்கும். மேலும், தெற்கு திசையில் படுக்க நம்முடைய ஆயுள் காலம் அதிகமாவதாக நம்பப்படுகிறது.
3. மேற்கு திசையில் தலை வைத்துப் படுக்கும் போது நல்ல பெயரும் புகழும் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.
4. ஆனால், சாஸ்திர ரீதியாக மறந்தும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதற்கு ஒரு புறநா கதை உள்ளது. சிவபெருமான் பார்வதி தேவியை பார்க்க வரும்போது விநாயகர் அவரை உள்ளே அனுமதிக்க மாட்டார். இதனால் கோபம் அடைந்து, சிவபெருமான் விநாயகர் தலையை துண்டித்து விட்டார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வதிதேவி பூதகணங்களிடம் வடக்கு நோக்கி தலை வைத்துப் படுத்திருக்கும் யாருடைய தலையையாவது வெட்டி எடுத்துவர சொன்னார்.
பார்வதி தேவி சொன்னபடியே பூதகணங்களும் வடக்குப்பக்கம் தலைவைத்துப் படுத்திருந்த யானையின் தலையை வெட்டி எடுத்து வந்து விநாயகருக்கு வைத்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்தாலும் வடக்கு பார்த்து படுக்க கூடாது என்று சொல்வதுண்டு.
அதையே அறிவியல் ரீதியாக பார்த்தால் பூமியில் வடக்கு திசையில் அதிகமாக காந்தசக்தி கொண்ட திசையாகும். எனவே, இந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்கும் போது காந்தசக்தி நம்முடைய மூளையை தாக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் வடக்குதிசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆக இனிமேல் உறங்கும் முன் சரியான திசையை தேர்ந்தெடுத்து உறங்குவது அவசியம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |