வீடுகளில் தவறியும் வெள்ளி பொருட்களை இந்த திசையில் வைக்காதீர்கள்..
நம்முடைய கலாச்சாரத்தில் வெள்ளி என்பது பாரம்பரிய பொருளாக இருக்கிறது. திருமணங்கள், ஆன்மீக வழிபாடுகள் மற்றும் வீடுகளில் அலங்கார பொருட்களாக இந்த வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜை அறையில் நாம் அதிக அளவில் வெள்ளி பொருட்களை பயன்படுத்திக்கிறோம்.
சில வீடுகளில் வெள்ளியில் செய்யப்பட்ட விநாயகர், லட்சுமி, அன்னபூரணி சிலைகளும் வைத்து வழிபாடு செய்வார்கள். ஜோதிட ரீதியாகவும் ஒருவர் வெள்ளி நகைகளை அணியும் பொழுது அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் மன அமைதியும் கிடைக்கிறது.

மேலும், வீடுகளில் வெள்ளி பொருட்கள் வைப்பதால் எதிர்மறை சக்திகள் நீங்கி ஆன்மீகம் மற்றும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கிறது.
நம்முடைய பூஜை அறையில் வெள்ளி விளக்குகள் அல்லது சிலைகளை வைக்கும் பொழுது நம் குடும்பத்தில் நல்ல அமைதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் வெள்ளிப் பொருட்கள் வைக்கிறதுக்கு உரிய திசை இருக்கிறது.
அந்த வகையில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வெள்ளி பொருட்களை வைப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திசையில் தான் செல்வம் மற்றும் ஆன்மீக சக்திகளை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.

குறிப்பாக வீடுகளில் மையப்பகுதிகளில் வெள்ளி பொருட்கள் வைக்க வேண்டாம். இது நமக்கு நன்மைகளை குறைக்கும் என்றும் சொல்கிறார்கள். மேலும், மிகவும் வெள்ளி சக்தி வாய்ந்த பொருளாகவே கருதப்படுகிறது.
அதை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். வெள்ளி நகை அல்லது பூஜை பொருட்களை சிவப்பு துணியில் சுற்றி வைத்தால் சந்திரனின் சக்தி வலுப்பெற்று மன அமைதி கிடைக்கிறது. அதாவது வெள்ளியை சிவப்பு துணியில் கட்டி மேற்கு திசையில் வைக்கும் பொழுது வீடுகளில் செழிப்பு உண்டாகி நன்மை கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |