மயில் இறகை எங்கு வைத்தால் தோஷம் விலகும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் மயில் இறகை வைப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முருகப்பெருமானின் வாகனம் மயில், கிருஷ்ணரின் புல்லாங்குழலில் மயிலிறகு உள்ளது.
மிக வண்ணமயமான இந்த மயில் இறகை எந்த திசையில் வைக்க வேண்டும், எது செய்யக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மயில் இறகு எதற்காக?
மயிலின் அழகில் மயங்காதவர்கள் இருக்க முடியாது, தோகை விரித்தாடும் மயிலை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
வீட்டில் மயில் இறகு இருப்பதால் எதிர்மறை சக்திகள் வெளியேறும் என்பது நம்பிக்கை, தோஷம் விலகி வீட்டில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.
வீட்டில் உள்ள அனைவரின் மனதிலும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும், குழந்தைகள் படிக்கும் அறையில் வைப்பதால் படிப்பில் அதீத கவனம் ஏற்படும்.
குழந்தைகளின் மனதில் மாற்றம் உண்டாகும், கணவன்- மனைவிக்கு இடையேயான உறவு பலப்பட மயில் இறகு முக்கிய பங்காற்றுகிறது.
இதனை பணப்பெட்டியில் வைப்பதால் செல்வம் கொழிக்கும், வீண் செலவு ஏதும் இல்லாமல் சேமிப்பு அதிகரிக்கும்.
எந்த திசையில் வைக்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி வடக்கு திசையில் மயில் இறகை வைக்கலாம், இது சேமிப்பை உயர்த்துகிறது.
கிழக்கு திசையில் வைப்பதால் வீட்டின் பொருளாதாரம் உயரும்.
பூஜை அறையில் முருகன் திருவுறுவப் படத்திற்கு அருகே வைப்பதால் செல்வ வளம் பெருகும்.
ஒருபோதும் வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டாம், இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது.