வாஸ்து: வீடுகளில் இந்த மரம் வைத்தால் தோஷம் உண்டாகுமாம்
வாஸ்து என்பது திசைகள் மற்றும் நம் இருப்பிடத்தைக் கொண்டு கணித்து சொல்ல கூடிய ஒரு ஜோதிட அமைப்பு அமைப்பாகும். அப்படியாக, வாஸ்து மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் கிரக அமைப்புகள் சரியாக இருக்க வேண்டும்.
அதேபோல், ஒருவர் வாழ்கின்ற இடம் சரியாக அமைந்திருக்க வேண்டும் என்றால் அங்கு வாஸ்து சரியாக இருக்க வேண்டும். அப்படியாக, வாஸ்துரீதியாக சில விஷயங்களை நம் வீடுகளில் வைக்கலாம் என்றும் வைக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.
வாஸ்து ரீதியாக நம்முடைய வீடுகளில் சில மரங்களை வைக்கின்ற பொழுது அவை எதிர்மறை ஆற்றலை அடியோடு நீக்கக்கூடிய சக்தி கொடுக்கிறது. குறிப்பாக பால் வடியும் மரங்களான பலாமரம் போன்றவற்றை வீடுகளில் வளர்ப்பது மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.
ஆனால், ஆலமரம், அரசமரம் மற்றும் வேப்பமரம் போன்றவற்றை நம்முடைய வீடுகளில் வளர்க்க கூடாது. இவை கோவில்களில் மட்டுமே இருக்க வேண்டிய மரமாகும். அதேபோல் வீடுகளை சுற்றி பனைமரம் இருந்தால் திருமண தடை போன்ற சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.
நம்முடைய வீடுகளில் முருங்கை மரம் வளர்ப்பது நன்மை தரும் என்றாலும் அவை வீட்டின் உயரத்திற்கு அதிகமாக மேலே வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் உயரத்தை விட அதிகமாக வளர்கின்ற பொழுது அவை சரியாக வெட்டி விடுவதை நல்ல பலன் கொடுக்கும்.
அதே போல், வீடுகளில் எல்லோருமே பூக்கள் செடிகள் வளர்க்க ஆசைப்படுவார்கள். அதை போல், பூக்கள் நிமிர்ந்து நிலைகள் பூக்கும் வகையாக இருப்பது நம்முடைய வாழ்விற்கு வளர்ச்சியை பெற்றுக் கொடுக்கும். செம்பருத்தி செடிகள் வீடுகளில் தாராளமாக வளர்க்கலாம்.
இது சிவபெருமானுக்கு உகந்த செடி என்பதால் நம் வீட்டிற்கு அதர்ஷத்தை தேடி கொடுக்கும். அதேபோல் வீட்டின் வாசலுக்கு நேர் எதிரே தென்னை மரம் தவிர வேறு எந்த மரத்தையும் வளர்க்க கூடாது.
மேலும், வாஸ்து ரீதியாக மரம் செடி கொடிகள் இவை எல்லாம் எவ்வளவு தூரம் வாஸ்து ரீதியாக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை இது காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |