2026: சுக்கிரன் கன்னி ராசி பயணம்: அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் யார்?
ஜோதிடத்தில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், திருமண வாழ்க்கை, கலை, வாகன யோகம் ஆகியவற்றுக்கு காரணமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் மற்றும் தடை இல்லாத சுகபோக வாழ்க்கை கிடைத்துவிடும்.
அந்த நிலையில், சுக்கிர யோகம் உருவாகக்கூடிய காரணமாக ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் முன்னேற்றம் வரலாம். அதாவது நவம்பர் 2026 ஆம் ஆண்டு ஜோதிட கிரக நிலவரத்தின் அடிப்படையில் சுக்கிர பகவான் கன்னி ராசியில் சித்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பயணம் செய்கிறார்.
கன்னி ராசி சுக்கிர பகவான் உடைய நீச ராசி என்றாலும் ஒரு சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் கவனமாக செயல்படுவது அவசியமாக இருக்கிறது.
இருப்பினும் இந்த சுக்கிரனுடைய இடமாற்றம் பொதுவாக ஒரு சில ராசிகளுக்கு நற் பலன்களை கொடுத்தாலும் தனிநபருடைய ஜாதகம் மற்றும் கோச்சார கிரகங்கள் பயணிக்க கூடிய இடத்தை பொருத்தும் தசா புத்திகள் பொருத்தும் பலன்கள் மாறுபடலாம். இருப்பினும் இந்த சுக்கிரனுடைய கன்னி ராசி பயணத்தால் மிகவும் சாதகமான பலனை பெறக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதியே சுக்கிர பகவான். இவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு தொடர்புடையதால் நல்ல பலன்கள் இவர்களுக்கு காத்திருக்கிறது. காதல் உறவுகளில் சந்தித்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். கலை, அழகு, ஆடை ,அலங்காரம் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி குறித்த எதிர்காலம் தொடர்பாக நல்ல முடிவுகளை எடுக்க நேரலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய நான்காம் வீடான சுகஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த காலகட்டம் இவர்களுக்கு வீடு, வாகனம், தாய், குடும்ப மகிழ்ச்சி மற்றும் சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும். வீடு அல்லது வாகனம் தொடர்பான திட்டங்கள் நிறைவேறும். தாயின் உடல்நலம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இடையே மற்றும் சற்று கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தினருடன் சுற்றுலா பயணமும் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் வீடான தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த அமைப்பு இவர்களுக்கு பணம், குடும்பம் பேச்சுத் திறன் மற்றும் சேமிப்பு தொடர்பான விஷயங்களை அதிக அளவில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது.
நிலுவையில் இருந்து வந்த பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சுத்திறன் வழியாக புதிய ஒப்பந்தங்களை போடுவீர்கள். தேவையில்லாத செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க கூடிய காலகட்டமாகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நீசம் பெறுகிறார். அதனால் இந்த காலகட்டங்களில் காதல் திருமணம் மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம், முயற்சிகளால் முன்னேற்றம் காத்திருக்கிறது.
நீண்ட நாட்களாக தள்ளிப் போட்ட வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். அழகு, ஆடை, கலை தொடர்பான முயற்சிகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். கடன் மற்றும் வங்கி தொடர்பான ஆடம்பரம் செல்வுகளின் பொழுது கவனமாக இருப்பது அவசியம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |