விதுர நீதி: நண்பர்களிடம் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்
நண்பர்கள் என்பவர்கள் அனைத்து இடங்களிலும் உடன் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான உறவாகும். ஆனால் பழகும் நண்பர்கள் யாவரும் அவ்வளவு உண்மையான நட்பாக நம்மிடம் இருக்கிறார்களா என்பது காலம் தான் உணர்த்த வேண்டும்.
அப்படியாக மகாபாரதத்தில் விதுர நீதி என்பதில் யார் நம்முடைய உண்மையான நண்பர்கள்? அவர்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றி அவர் நமக்கு சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
1. நண்பர்கள் என்பவர் நம்முடைய நன்மை தீமை காலங்களில் நம்முடன் நின்று நம்முடன் பயணிக்க கூடியவர்களாக இருப்பார்கள். உண்மையான நட்பு என்பது நேரம் காலம் சூழ்நிலை பாராமல் நம்முடன் இருப்பதே ஆகும் என்கிறார்.
2. அதேபோல் காலம் கொடுக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் நம்மை விட்டு விலகாமல் அந்த நேரங்களில் நமக்கு அன்பான வார்த்தைகளும் முன்னோக்கி செல்லக்கூடிய ஒரு வலிமையையும் நம்முடன் இருந்து கொடுக்கக் கூடியவர்கள் தான் உண்மையான நட்பு என்கிறார்.
3. உண்மையான நட்பிற்கு ஒரு மிக உகந்த செயல் என்னவென்றால் நம்மை தவறான வழிக்கு அவர்கள் தள்ளாமல் நன்மை தீமையை எடுத்துச் சொல்லி ஒரு நேர்மையான வழி நடத்துபவர்களே உண்மையான நட்பு என்கிறார். அதோடு நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய முடிவுகளாக இருந்தாலும் அல்லது சிறிய முடிவாக இருந்தாலும் உண்மையான நட்பு நாம் செய்யும் செயல் நமக்கு நன்மையை தருமா என்று ஆலோசித்து நமக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிறார்.
4. மேலும் உண்மையான நட்பு நம்முடைய திறமையின் மீதும் நம்முடைய ஆசைகள் மீது மட்டுமே நம்பிக்கை வைக்காமல் நம் மீது நம்பிக்கை வைத்து நாம் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற ஒரு தூண்டுதலையும் அதற்கான பாராட்டுகளையும் ஆதரவையும் எப்பொழுதும் தெரிவிப்பார்கள் என்கிறார்.
ஆக விதுர நீதியில் உண்மையான நட்பு என்பது ஒரு சில இலக்கணங்களோடு நம்முடன் பயணிப்பதாகும் என்கிறார் விதுரர். இவ்வாறான ஒரு நல்ல எண்ணங்கள் கொண்ட நட்புகள் உங்களிடம் இருந்தால் அவர்களை விட்டு விடாமல் அவர்களுடன் பயணம் செய்து வாழ்க்கையில் இருவரும் முன்னேற வேண்டும் என்கிறார்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







