நீங்கள் 1 ஆம் தேதி பிறந்த நபரா? உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு இது தானாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதாவது நாம் ராசி நட்சத்திரத்தை வைத்து எவ்வாறு நம்முடைய எதிர்காலத்தை கணிக்க தெரிந்து கொள்கின்றோமோ அதே போல் ஒருவர் பிறந்த தேதியை வைத்து நாம் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த குறியீடுகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது? அவர்களுடைய குண நலன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, எண் ஒன்று என்கின்ற தேதிகளில் பிறந்தவர்கள் தனிமை விரும்பியாகவே இருப்பார்கள். இவர்கள் புலியை போல் தனித்து எல்லா விஷயங்களிலும் செயல்பட்டு சாதிக்க கூடிய திறனை பெற்று இருப்பார்கள்.
மற்ற குழந்தைகள் கலகலப்பாக நண்பர்களுடன் இருந்தாலும் இவர்கள் தனிமையை விரும்பி தனியாக யோசித்து அதற்கான முயற்சிகளை எடுத்து வெற்றி பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய அதிர்ஷ்ட குறியீடாக புலிச்சின்னம் இருக்கிறது.
ஆதலால் இவர்கள் தொழில் அல்லது இவர்கள் தொழிலுக்கான குறியீடுகளாக இந்த புலி சின்னத்தை இவர்கள் பயன்படுத்தும் பொழுது இவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் உயர்ந்த செல்வாக்கும் இவர்களுக்கு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படியாக மேலும் என்ன தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த குறியீடுகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது என்று கீழ்காணும் காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.