உங்கள் ஜாதகத்தில் வெற்றியை கொடுக்கும் கிரகம் எது தெரியுமா?

By Sakthi Raj Jul 25, 2026 07:41 AM GMT
Report

நம்முடைய ஜாதகத்தில் நாம் வெற்றி பெறும் வழியை சொல்லக்கூடிய முக்கியமான நபராக நம்முடைய லக்னாதிபதி உள்ளார். நம்முடைய லக்னாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறாரோ அப்படி தான் நம்முடைய வாழ்க்கை மாறும் என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில், லக்னாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அதனுடைய தன்மையும் முன்னேற்றமும் நம் வாழ்க்கையில் வெளிப்படும் என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

சுவாமிக்கு சமர்ப்பித்த பூ கீழே விழுந்தால் சகுனம் சொல்வது என்ன?

சுவாமிக்கு சமர்ப்பித்த பூ கீழே விழுந்தால் சகுனம் சொல்வது என்ன?

லக்னாதிபதி 1-ஆம் வீட்டில்:

மனதில் தன்னம்பிக்கையும், தனித்துவமாகவும் சுய முயற்சிகளில் வெற்றிகளும் கிடைக்கும்.

லக்னாதிபதி 2-ஆம் வீட்டில்:

ஒருவருடைய பேச்சுத் திறன் மற்றும் குடும்பத்தில் நல்ல மதிப்பு பணத்தை நிர்வாகிக்கக் கூடிய திறன் வழியாக நல்ல முன்னேற்றம் உண்டு.

லக்னாதிபதி 3-ஆம் வீட்டில்:

மனதில் தைரியம், தகவலை பரிமாற்றம் செய்யக்கூடிய தன்மை, விடாமுயற்சி வழியாக எதையும் சாதிக்க கூடிய பலனைப்பெறுவார்கள்.

லக்னாதிபதி 4-ஆம் வீட்டில்:

மனதில் அமைதி மற்றும் உறுதியான தன்மை கல்வியில் வளர்ச்சி போன்றவை கிடைக்கும்.

உங்கள் ஜாதகத்தில் வெற்றியை கொடுக்கும் கிரகம் எது தெரியுமா? | What Is Your Laknathypath Says About Your Life

லக்னாதிபதி 5-ஆம் வீட்டில்:

இவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றல் எதையும் சரியாக முடிவு எடுக்கக் கூடிய தன்மையால் வெற்றி பெறுவார்கள்.

லக்னாதிபதி 6-ஆம் வீட்டில்:

ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு, சவால்களை எளிதில் சமாளிக்கக்கூடிய திறன் வழியாக உயர்வு நிலைக்கு செல்வார்கள்.

லக்னாதிபதி 7-ஆம் வீட்டில்:

கூட்டாளிகளுடன் நல்ல தொடர்பு, சரியான மனிதர்களின் ஆதரவு வழியாக எதிலும் முன்னேற்றம் பெறுவார்கள்.

லக்னாதிபதி 8-ஆம் வீட்டில்:

இவர்கள் நடக்கக்கூடிய மாற்றங்களை எதார்த்தமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் மற்றும் ஆராய்ச்சி விடாமுயற்சியால் வெற்றி பெறுவார்கள்.

வாஸ்து: உங்கள் வீடுகளில் வேப்ப மரத்தை மறந்தும் இந்த திசையில் வைத்து விடாதீர்கள்

வாஸ்து: உங்கள் வீடுகளில் வேப்ப மரத்தை மறந்தும் இந்த திசையில் வைத்து விடாதீர்கள்

லக்னாதிபதி 9-ஆம் வீட்டில்:

இவர்கள் அறிவு மற்றும் குருவின் அருளால் தர்ம சிந்தனை, தொலைதூர பயணங்கள் மூலம் நல்ல வளர்ச்சி இவர்களுக்கு கிடைக்கும்.

லக்னாதிபதி 10-ஆம் வீட்டில்:

மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். தலைமைத்துவ பண்பு அதிகம் இருக்கும். தொழிலுக்காக தன்னை அர்ப்பணித்து அதன் வழியாக உயரக்கூடியவர்கள்.

லக்னாதிபதி 11-ஆம் வீட்டில்:

இவர்களுக்கு நல்ல நட்பு தொடர்புகள் வழியாக தொழில் ரீதியாக நல்ல லாபமும் முன்னேற்றமும் கிடைக்கும்.

லக்னாதிபதி 12-ஆம் வீட்டில்:

இவர்களுக்கு ஆன்மீகத்தில் வெற்றி, வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு மற்றும் அமைதியான சிந்தனைகள் மூலம் உயர்ந்தநிலைக்கு செல்வார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US