அளவு கடந்த துன்பமா?மனம் தளராமல் இதை செய்யுங்கள்
உலகில் பிறந்த உயிர்களில் யாருக்கு தான் துன்பம் இல்லை.சில துன்பங்களை நாம் எவ்வளவு சமாதானம் செய்தாலும்,அவை பிறவி முடியும் வரை போக்க முடியாத ஒன்று.அப்படியாக எந்த ஒரு மனிதனும் தனக்கு மட்டும் தான் இவ்வளவு துன்பம் என்று மனம் வருந்தாமல்,உலக வெளிச்சத்திற்கு வந்து பார்க்க ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை தாங்கி கொண்டு வாழ்க்கை பயணத்தை மேற்கொள்வதை பார்த்து நாமும் அவர்களிடம் ஐக்கியம் ஆகிவிட வேண்டும்.
பிறவி அவன் கொடுத்த பரிசு,அதில் வரும் இன்பம் துன்பம் அனுபவிப்பது நம் கடமை.இருந்தாலும் துன்பம் என்னும் நெருப்பை எத்தனை நாள் பொறுத்துக்கொள்வது என்ற கேள்வி இருக்கும்.அவர்களுக்கான பதிவு தான் இது.
வாழ்க்கை பயணத்தில்,ஒருவரின் வீதி அவர்களை எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ கட்டாயம் எவர் தடுத்தாலும் அவர்களுக்கான இடத்தில் அவர்களை நிறுத்தி விடும்.அவை வெற்றி தோல்வி,இன்பம் துன்பம் ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அதை அனுபவித்து ஆகவேண்டியது நம்முடைய கர்மவினைகள்.
அந்த வகையில் பலரும் தீராத துன்பத்தை கடந்து வந்திருப்பார்கள் இல்லை துன்ப பாதையில் பயணம் செய்பவராக இருப்பார்கள்.கட்டாயம் அவர்கள் மனம் மிக கனமாக இருக்கும்.
அந்த வேளையில்,அவர்கள் கண்களை மூடிக்கொண்டு சரண் அடையவேண்டியது திருவண்ணாமலையில் வீற்றியிருக்கும் அருணாசலேஸ்வரரை தான்.திருவண்ணாமலையை நினைத்தாலே முக்கி என்பார்கள். அப்பன் ஈசனை போல் துயர் துடைப்பவர்,கர்மவினைகள் அழிப்பவர் யார் உண்டு?
திருவண்ணாமலையில் மிக முக்கிய விஷேசம் கிரிவலம்.துன்ப காலத்தில் அங்கு சென்று கிரிவலம் செல்ல நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம் பாவம் மற்றும் கர்மவினைகள் போக்குவதாக இருக்கும்.ஒருவருக்கு கிரிவலம் போகவேண்டும் என்ற எண்ணம் வந்தாலே அது நிச்சயம் ஈசனின் வழிகாட்டுதலாக தான் இருக்கும்.
அங்கு சென்று உங்களை முழுமையாக ஈசனிடம் கொடுத்து விடுங்கள்.அவனை வழிபட உங்கள் கஷடத்தை வாங்கி கொண்டு உடலும் தூய மனதுமாக உங்களை திரும்பி அனுப்புவான்.ஆக துன்ப காலத்தில் அவனிடம் சென்று புலம்புங்கள் அவன் ஆறுதல் சொல்லி உங்களை வழிஅனுப்புவான்.வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பான்.
ஓம் நமச்சிவாய!!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |