ஜோதிடம்:பெண்களுக்கு திடீர் என்று வலது கண் துடிக்கிறதா?அப்போ கவனமாக இருங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் நம் உடலில் ஏற்படும் சில உடல் அசைவுகளுக்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.அப்படியாக திடீர் என்று சிலருக்கு கண்கள் துடிப்பதை கவனிக்க முடியும்.அப்படியாக அவை நம்முடைய வாழ்க்கையை பற்றி சில அறிகுறிகள் உணர்த்த வருகிறது என்று நம்பப்படுகிறது.
அப்படியாக ஆண் பெண் இவர்களுக்கு கண்கள் துடித்தால் என்ன பலன் என்று பார்ப்போம். பொதுவாக பெண்களுக்கு இடது கண்கள் துடிப்பது நன்மை தருவதாக கருதப்படுகிறது.இவ்வாறு கண்கள் துடிக்கும் பொழுது அவர்கள் உறவினர்களிடம் இருந்து நற்செய்தி வருவதையும்,குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படப் போவதாக அர்த்தம்.
இதுவே ஆண்களுக்கு இடது கண் துடித்தால், கஷ்ட காலம் ஏற்படப்போவதாக அர்த்தம். அவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்.காரணம் அவர்கள் ஏதேனும் வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள வாய்ப்புகள் உள்ளது.வாழ்கையில் ஒரு மிக பெரிய சவாலை சந்திக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
அதே போல் பெண்களுக்கு,வலது கண் துடித்தால், அவர்கள் வாழ்க்கையில் கஷ்ட காலத்தை சந்திக்க போகிறார்கள் என்று அர்த்தம்.இவ்வாறு துடிக்கும் பொழுது குடும்பத்தில் அமைதியின்மை,குடும்ப உறவினர்கள் இடையே கருத்துவேறுபாடு,உடல்நலன் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால் ஆண்களுக்கு வலது கண் துடிப்பது மங்கலகரமாக கருதப்படுகிறது.ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால்,அவர்களுக்கு பெயர் புகழ் போகிறார்கள் என்று அர்த்தம்.தொழிலில் நல்ல மாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நம்பிக்கையையும், எதிர்க்காலத்தையும், அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.அதே போல்,ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் இரண்டு கண்கள் மற்றும் புருவங்கள் சேர்ந்தது போல துடித்தால் அவர்களுக்கு நற்பலன் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |