மிகவும் சொகுசான வாழ்க்கையை வாழக்கூடிய ராசியினர் யார் தெரியுமா?
மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கைக்கும் ஜோதிடத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சில ராசியினர் இயல்பாகவே ஆடம்பரத்தின் மீது பிரியமும், சொகுசான வாழ்க்கையின் மீது ஒரு ஈர்ப்பும் கொண்டிருப்பார்கள்.
இதற்கு அவர்களுடைய ராசி அதிபதியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் ஆசைக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களுக்கு பிடித்தது போல் எப்பொழுதும் உயர்த்திக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் சொகுசாக வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரன் ஒரு மனிதனுக்கு ஆடம்பரம் செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை கொடுக்கக் கூடியவர். அதனால் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கும் ஆடம்பரமான பொருட்களை வாங்கி அணிவதற்கும் விருப்பம் கொள்வார்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய எந்த பொருட்களாக இருந்தாலும் அதில் தனித்துவமாக இருக்கக்கூடிய பொருளை தான் வாங்க விரும்புவார்கள்.
துலாம்:
துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிர பகவான் தான். இவர்களின் சின்னம் தராசு என்பதால் இவர்கள் நீதியையும் தர்மத்தையும் கடைபிடிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்களுக்கு சொகுசான வாழ்க்கை மீது ஒரு ஈர்ப்பு இருந்தே கொண்டே இருக்கும்.
இவர்கள் அந்த வாழ்க்கையை தேடி செல்லவில்லை என்றாலும் அந்த அமைப்பு இவர்களுக்கு இயல்பாகவே அமைந்து விடும். கலை ரசனை மிக்கவர்களாக இருப்பார்கள். எங்கு சென்றாலும் இவர்களுக்கு ஒரு கூடுதல் மரியாதை கிடைக்க கூடிய அமைப்பு சுக்கிர பகவானால் உருவாகும்.
மகரம்:
மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இவர்கள் ஒரு தனித்துவமான குணம் பெற்று இருப்பார்கள். சபையில் பத்து நபர் ஒரு கருத்தை சொன்னால் இவர்கள் தனித்துவமாக ஒரு கருத்தை தெரிவித்து அனைவருடைய கவனத்தையும் ஏற்கக் கூடியவர்கள்.
மேலும், தங்களிடம் இருக்கக்கூடிய பொருட்கள் ஒரு சிறந்த பொருளாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் எண்ணக் கூடியவர்கள். இவர்களுடைய சிந்தனையும் இவர்கள் வாங்கக்கூடிய விஷயமும் தனித்துவமானதாகவும் எல்லோரையும் கவரக்கூடியதாகவும் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |