2026: மகா சிவராத்திரியில் நடக்கும் சக்தி வாய்ந்த கிரக பெயர்ச்சி.. கட்டாயம் இது நடக்குமாம்

By Sakthi Raj Feb 15, 2026 07:21 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் சிவபெருமானே தனக்கு பிடித்த நாளாக சிவராத்திரி தினத்தை சொல்லியிருப்பது இந்த நாளின் விசேஷத்தை நமக்கு எடுத்து சொல்கிறது.

இவ்வளவு சக்தி வாய்ந்த நாளில் முக்கியமான 3 கிரக பெயர்ச்சி நடக்கிறது. அதாவது புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றுகிறார்கள். இதனால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் நன்மை வர போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: மகா சிவராத்திரியில் நடக்கும் சக்தி வாய்ந்த கிரக பெயர்ச்சி.. கட்டாயம் இது நடக்குமாம் | 2026 Feb 15 Maha Sivarathiri Nakshatra Peyarchi

2026 சனி திரயோதசி: வாழ்க்கையில் அதிரடி திருப்பங்கள் பெறப்போகும் ராசிகள்

2026 சனி திரயோதசி: வாழ்க்கையில் அதிரடி திருப்பங்கள் பெறப்போகும் ராசிகள்

மேஷம்:

மேஷ ராசியினருக்கு சந்திரன், புதன், செவ்வாய் சேர்க்கை இவர்களுக்கு இந்த காலகட்டம் மன நிம்மதியை கொடுக்கப்போகிறது. வேலையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனை படிப்படியாக குறையும். இந்த காலகட்டம் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு பழைய வண்டியை கொடுத்து புது வண்டி வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு மூன்று கிரகங்களுடைய மாற்றமானது அவர்களுக்கு சேமிப்பை கொடுக்கும். வேலை பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நீண்ட நாட்களாக திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நினைத்த வரன் அமையும். உடன் பிறந்தவர்களால் சந்தித்து வந்த பிரச்சனை யாவும் விலகும். சொத்துக்களில் இருந்து வந்த வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகள் நினைத்தது போல் கிடைக்கும்.

2026 மகாசிவராத்திரி: 12 ராசிகளும் சிவபெருமானின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

2026 மகாசிவராத்திரி: 12 ராசிகளும் சிவபெருமானின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

மகரம்:

மகர ராசியினருக்கு இந்த மூன்று கிரகங்களுடைய மாற்றமானது இவர்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்புமுனையை கொடுக்க போகிறது. வாழக்கை துணையின் குடும்பத்தினரிடம் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும் நாள். நீண்ட நாளாக இழுபறியாக இருக்கும் வழக்குகள் நல்ல முடிவை பெரும். மேலும், ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் விலக போகிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US