செவ்வாயின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்:92 நாட்களுக்கு ராஜாவாக வாழப்போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் செய்கிறது. செவ்வாய் கிரகம் 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறது.
ஜோதிடத்தின் படி, செவ்வாய் சாதுர்யம், வீரம், துணிச்சல் மற்றும் நிலத்தின் காரக கிரகமாகக் கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி, அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் தனது நீச ராசியான கடக ராசியில் நுழைந்துள்ளது மற்றும் அடுத்த 92 நாட்களுக்கு அங்கேயே இருக்கும்.செவ்வாயின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு செவ்வாயின் பெயர்ச்சி வாழ்க்கையில் புது மாற்றங்களை கொடுக்க போகிறது.இந்த காலகட்டங்களில் இறைவழிபாடு உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும்.போட்டி தேர்விற்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு வெற்றிகள் குவியும்.நீங்கள் ஈடுபடும் அனைத்து வேலைகளிலும் உங்கள் குடும்ப ஆதரவு கட்டாயம் இருக்கும்.கடின உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி மிக சாதகமான பலன்களை கொடுக்க போகிறது.மனதில் எதையும் சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.வியாபாரத்தில் நஷ்டத்தை சரி செய்யும் காலம்.உங்கள் ஆசை விருப்பங்கள் எல்லாம் கடவுளின் அருளால் பூர்த்தி ஆகும்.கணவன் மனைவி இடையே பந்தம் அதிகரிக்கும்.வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 92 நாட்கள் மிக பெரிய அதிர்ஷ்ட பலனை கொடுக்க போகிறது.மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கும்.காதல் உறவு இனிமையாக அமையும்.நண்பர்களுடன் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.குழந்தைகள் உங்களுக்கு நற்பெயரை பெற்று தருவார்கள்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |