வாஸ்து: பூஜை அறைக்கு அருகில் அமர்ந்து சாப்பிடலாமா?
வாஸ்து என்பது நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒன்று. வாஸ்து சரியாக இருக்க வாழ்க்கையில் முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக அமையும். மேலும், ஒருவர் வீட்டில் உணவு அருந்துவதற்கும் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்படியாக, வீட்டில் தவறான இடங்களில் அமர்ந்து சாப்பிடும் பொழுது நாம் வாஸ்து தோஷத்திற்கு ஆளாகக்கடும். அதன் அடிப்படையில், வாஸ்து ரீதியாக எந்த இடங்களில் அமர்ந்து சாப்பிட கூடாது என்று பார்ப்போம்.
1. கதவு நிலப்படி அல்லது வாசலில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் தவறு. இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் எதிர்மறை ஆற்றல் உண்டாகும். காரணம் நம்முடைய வீட்டின் வாசல் மற்றும் கதவுகளில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் அந்த இடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
2. நாம் ஒரு பொழுதும் வீட்டின் படுக்கைறையில் அமர்ந்து சாப்பிட கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய வீட்டின் பொருளாதார சிக்கல் உண்டாகும்.
3. அதே போல் நம் வீட்டின் பூஜை அறைக்கு அருகில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது வீட்டின் மகிழ்ச்சியும் செழிப்பும் குறையும்.
4. நாம் எப்பொழுதும் அழுக்கான இடங்களில் அமர்ந்து சாப்பிட கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விடும்.
5. சிலர் சமையல் அறையில் அருகில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்யும் பொழுது குடும்பத்தில் மோதல்கள் மற்றும் பண இழப்பை சந்திக்கக்கூடும். ஆக, நாம் உணவு சாப்பிடும் பொழுது, வாஸ்து சாஸ்திரப்படி சாப்பிடும் பொழுது நமக்கு நேர்மறை ஆற்றல் உருவாகுவதோடு, லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |