இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி தான்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஜோதிடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படியாக, ஜோதிடம் என்பது 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் கொண்டு அமைந்து உள்ளது.
இதில் ஒவ்வொரு ராசிகளுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களும் இருக்கும். அப்படியாக, 27 நட்சத்திரங்களில் மிக பெரிய சாதனையாளராகும் நட்சத்திரங்கள் யார்? அவர்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்று பார்ப்போம்.
பரணி:
பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் என்ற பழமொழி உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் எதையும் துணிச்சலாக செய்யக்கூடிய தன்மை கொண்டவர்கள். இவர்கள் போட்டி சவால் என்று வந்து விட்டால் அதை எதிர்த்து போராடி சாதித்து விடுவார்கள். மனதில் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி அடைவார்கள். தொழில் ரீதியாக எப்பொழுதும் சாதனை செய்யும் மனிதராக இருப்பார்கள்.
மகம்:
கேது பகவானால் ஆளப்படும் நட்சத்திரம் தான் இந்த மகம் நட்சத்திரம். இவர்களுக்கு இறைவன் மீது அதீத நம்பிக்கை இருக்கும். இவர்களை யாரும் அசைக்க முடியாத தன்மை கொண்டவர்கள். தொழில் என்று வந்து விட்டால் இவர்கள் சரியான முறையில் சில வேலைகளை செய்து சாதித்து காட்டுவார்கள். இவர்கள் தோல்வி அடைந்தாலும் மீண்டு எழுந்து வந்து வெற்றி அடைவார்கள்.
விசாகம்:
குரு பகவானால் ஆளப்படும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இயல்பினைக் கொண்டவர்கள். இவர்கள் உணர்ச்சி வசப்பட்டாலும் செய்யும் காரியத்தை சிறப்பாக செய்வார்கள். இவர்கள் எதிரிகளை வீழ்த்த கூடிய தன்மை கொண்டவர்கள். எதையும் மிகவும் எளிதாக சமாளித்து ஜெயித்து விடுவார்கள்.
அவிட்டம்:
செவ்வாய் பகவானால் ஆளும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையை மிகவும் வித்யாசமான கோணலில் சிந்தித்து செயல்பட கூடியவர்கள். இவர்கள் மெதுவாக செயல்பட்டாலும் நிலையான வெற்றியை பெற விரும்புவார்கள். இவர்கள் எதார்த்த குணம் கொண்டவர்கள். தடைகள் வந்தாலும் அதை மீறி சாதனை செய்யக்கூடியவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |