12 ராசிகளில் யார் எளிமையானவர்கள்? யார் ஆடம்பரமானவர்கள்?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை இருக்கிறது. அந்த வகையில், 12 ராசிகளில் யார் எளிமையானவர்கள் ?யார் ஆடம்பரமானவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் ஒரு விஷயத்தில் ஜெயித்துவிட்டால் ஆடம்பரமாக இருப்பார்கள். அதுவே தோற்றுவிட்டால் எளிமையாக இருப்பார். ஆனால் எப்பவும் கெத்தாக இருக்கக் கூடியவர்கள்.
ரிஷபம்:
இவர்கள் எப்பொழுதும் ஆடம்பரமாக இருக்க விரும்புபவர். ஆனால், பணம் செலவு செய்யும் பொழுது மட்டும் நிறைய யோசிப்பார்கள்.
மிதுனம்:
திடீரென்று எளிமையாகவும் திடீர் என்று ஆடம்பரமாகவும் மாறக் கூடியவர்கள். ஆனால், குடும்பம் என்று வரும் பொழுது ஆடம்பரத்தை தான் பின்பற்றுவார்.

கடகம்:
இவர்கள் வீட்டிற்குள் எளிமையாக இருப்பார். ஆனால், ஷாப்பிங் இன்று வந்துவிட்டால் ஆடம்பரமாக இருப்பார்.
சிம்மம்:
இவருக்கு பிறவியிலே ராஜ யோகம் ஆடம்பரமாக இருக்க விரும்புபவர். காசே இல்லாவிட்டாலும் கெத்தாக வாழக்கூடியவர்கள்.
கன்னி:
நூறு சதவீதம் எளிமையாக இருக்கக்கூடியவர். ஆனால், அவர்கள் போடுகின்ற திட்டம்தான் ஆடம்பரமாக இருக்கும்.
துலாம்:
இவர்களை பார்ப்பதற்கே ஆடம்பரமாக காட்சி இருக்கும். ஆனால் செலவு செய்யும் பொழுது கவனமாக செலவு செய்வார்கள்.
விருச்சிகம்:
இவர்கள் ஆடம்பரமாக இருப்பதற்கே வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆடம்பரமாக இருப்பார்கள். ரகசியமாக பணத்தை சேமித்து வைப்பதில் வல்லவர்கள்.

தனுசு:
இவர்கள் எப்பொழுதும் ஆடம்பரத்தை விரும்புவார். ஆனால், எளிமையையும் கடைபிடிக்கக் கூடியவர்.
மகரம்:
எப்பொழுதும் எளிமையை கடைப்பிடிக்க கூடியவர். ஆனால், இவர்களுடைய பேங்க் பேலன்ஸ் பார்த்தால் எல்லோரும் அரண்டு விடுவார்கள்.
கும்பம்:
இவர்கள் கடைகளில் பேரம் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் பயன்படுத்திய பொருட்களெல்லாம் ஆடம்பரமாக இருக்கும்.
மீனம்:
இவர்கள் கனவு உலகில் பயங்கர ஆடம்பரமாக இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் மிகவும் எளிமையை கடைப்பிடிக்க கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |