2026: இந்த ஆண்டு எந்த ராசிகளுக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ஆண்டும் கிரகங்கள் தங்களுடைய மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிகளுக்கு ஏழரை சனியின் தொடக்கம் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு சனி பெயர்ச்சியின் காலகட்டத்தில் மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும். அதோடு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதியை சனி பெயர்ச்சி நடந்து விட்டது.
கும்ப ராசியில் இருந்து சனிபகவான் மீன ராசிக்கு ஏற்கனவே பெயர்ச்சியாகி விட்டார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2026 மார்ச் மாதம் ஆறாம் தேதி தான் சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த சனி பெயர்ச்சி ஆனது மிகப்பெரிய திருவிழா போல் சனி பகவான் ஆலயங்களில் நடைபெறும்.
இந்த பெயர்ச்சியின் அடிப்படையில் எந்த ராசிகளுக்கு இந்த ஆண்டு ஏழரை சனி துவங்குகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் ஏழரை சனி துவங்குகிறது. இதில் இவர்களுக்கு முதல் கட்டமாக விரைய சனி ஏற்பட உள்ளது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஏற்கனவே அவர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் மார்ச் மாத வர இருக்கிற சனிப்பெயர்ச்சியின் படி இரண்டாவது பகுதியான ஜென்ம சனி இவர்களுக்கு தொடங்கி இருக்கிறது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனி அல்லது குடும்ப சனி என்று சொல்லக்கூடிய சனி பெயர்ச்சி நடக்கிறது இது ஏழரை சனியின் கடைசி கட்டமாகும்.
ஆக இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் சிறு சிறு பாதிப்புகள் அவ்வப்போது அவர்கள் வாழ்க்கையில் கொடுக்கலாம். ஆதலால் இந்த காலகட்டங்களில் இவர்கள் எவ்வளவு தூரம் இறை வழிபாடும் புண்ணியகாரியங்களும் செய்கிறார்களோ அந்த அளவுக்கு சனி பகவான் மனம் குளிர்ந்து இவர்களுக்கு நல் ஆசியை வழங்குவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |