தங்க மோதிரம் அணிவது எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்னு தெரியுமா?
இந்து மதத்தின் அடிப்படையில் தங்கம் மகாலட்சுமியின் அம்சமாகவும், விலைமதிப்பற்ற உலோகமாக பார்க்கப்படும்.
தங்க நகை அணிவது சில ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தைத் தரும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதே போல சில ராசிகளுக்கு தங்க நகை அணிவது அவ்வளவாக நல்லதல்ல எனவும் குறிப்பிடப்படுகிறது.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தங்கம் அணிவது எப்படி அதிர்ஷ்டம், எந்தெந்த ராசிகளுக்கு அது அதிக அதிர்ஷ்ட பலனைத் தரும். யாருக்கு மங்களகரமானதாக இருக்கும் என்பது குறித்த முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் -மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்க மோதிரம் அணிந்தால் மிகவும் மங்களகரமான பலன்கள் கிடைக்கும். இதனால் உங்களிடம் தைரியமும் வலிமையும் அதிகரிக்கிறது.
எல்லா துறைகளிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது. அதோடு அதிர்ஷ்டமும் சாதகமாக இருக்கும். எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும்.
இந்த ராசியினர் அதிகம் கோபப்படும் தன்மை கொண்டவர்கள் என்பதால், தங்கத்தில் மோதிரம் அணிவது அவர்களுளின் ஆக்குரோஷத்தை குறைக்க பெரிதும் துணைப்புரியும்.
சிம்மம் -சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்க உலோகம் அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த ராசியினர் நிச்சயம் தங்கத்தில் மோதிரம் அணிய வேண்டும்.
நெருப்பு ராசியாகவும், சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு, தங்கத்தின் காரணியான வியாழன் கிரகத்துடன் நட்புறவைக் கொண்டுள்ளது.
எனவே, இந்த ராசியினர் தங்கம் அணிவதால், ஆற்றலும், உற்சாகமும் அதிகரித்து, அனைத்துப் பணிகளிலும் வெற்றி கிட்டும்.
தனுசு - தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்க மோதிரம் அணிவதால் சுப பலன்களைப் பெற்றிட முடியும்.
செய்யக்கூடிய வேலைகள் விரைவில் முடியும் பலன் விரைவாக கிடைக்கும். தங்க உலோகத்தின் காரணியாக குரு கருதப்படுவதால், தங்க ஆபரணங்கள் அணிவதால், வியாழன் கிரகத்தில் ஆற்றல் அதிகரிக்கும்.
அதன் சுப பலன் காரணமாக பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, நிதி நிலையில் உயர்வு ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க தங்கம் இவர்களுக்கு துணைப்புரியும்.
மீனம் - மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தங்க மோதிரம் அணிவது வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றத்தை கொடுக்கும்.
இவர்களின் உடல் ஆரோக்கியம் வலுவடைவதற்கும், தொழில் ரீதியில் தடைகள் நீங்கி வெற்றியடைவும் இவர்கள் தங்கம் அணிவது துணைப்புரியும்.