அட்சய திருதியை 2025: உருவாகும் லட்சுமி நாராயணன் யோகத்தால் தங்க மழை எந்த ராசிகளுக்கு?
நம்முடைய இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் விஷேசமான தினமாகும். இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை நட்சத்திரத்தில் அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நாளில் நாம் எந்த காரியம் செய்தாலும் அவை நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்கிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் மீனராசியில் சுக்கிர பகவான் அமர்வதால் மிக பெரிய உச்ச பலனை கொடுக்க உள்ளார்.
சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகுவது இன்னும் அந்த கூடுதல் சிறப்பை பெறுகிறது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், துன்பங்கள் விலகி அதிர்ஷ்டம் பெற போகிறார்கள். அவை எந்த ராசிகள் என்று பாப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியை வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க உள்ளது. அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய முடிவை தெளிவாக எடுப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் பல மடங்கு வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
கடகம்:
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியை மனதில் நேர்மறையான சிந்தனை உண்டாக்கும். இவர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு செய்யும் முயற்சிகள் எல்லாம் நல்ல லாபமாக அமையும். கடன் வாங்கியவர்கள், கடனை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த அட்சய திருதியை செல்வத்தையும் முகத்தில் தெளிவு கொடுக்க உள்ளது. சுக்கிரனின் பார்வை உங்கள் மீது விழுவதோடு, அவர் உச்சம் பெற்ற இடத்தில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும். சமுதாயத்தில் உங்கள் அதிர்ஷ்டம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியை பண்டிகை நாளில் உருவாகக்கூடிய யோகங்களால் குடும்ப வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அமையும். செய்யும் தொழிலில் லாபமும், பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும். சனி தேவரின் அருளாலும், லட்சுமி நாராயண ராஜ்யோகத்தின் மூலமாகவும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் சுப யோகங்கள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |