இன்றைய ராசி பலன்(19-04-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு காலை முதல் மனதில் வேலை சம்பந்தமான குழப்பம் உண்டாகும். சிலருக்கு உடலில் சிறு சிறு தொல்லைகள் உருவாகலாம். பொருளாதார நெருக்கடிகள் விலகும். குழந்தைகளுடன் நேரம் செலவிடுவீர்கள்.
ரிஷபம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் செய்யும் செயல்களில் சில சிக்கல் தோன்றும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். வேலை செய்யும் இடத்தில் உண்டான பிரச்சனைகள் விலகும்.
மிதுனம்:
வாழ்க்கையை பற்றிய எதிர்கால பயம் தோன்றி மறையும். குடும்பத்தில் பெற்றோர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆலோசனை கேட்டு நடப்பதால் வெற்றிகள் பெறுவீர்கள்.
கடகம்:
இன்று மனதில் அமைதி நிலவும். உங்களுக்கான போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். திட்டமிட்டபடி வேலையை செய்து முடிப்பீர்கள். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
சிம்மம்:
பூர்வீக சொத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பிள்ளைகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி:
உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். செயல்களில் தடைகளை சந்திக்க வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. நேற்று விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
நேற்று வரை முடிவிற்கு வராத பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். சிலருக்கு மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மரியாதையும் செல்வாக்கும் உயரும்.
விருச்சிகம்:
வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். உங்கள் வார்த்தைகளால் விரோதம் உண்டாகும். கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும்.
தனுசு:
கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு உண்டாகும். கடன் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மகரம்:
பண விவகாரத்தில் கவனம் தேவை. உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவு செய்வீர். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் வேலைகளை நடத்தி முடிப்பீர்.
கும்பம்:
நினைத்ததை நடத்தி முடிப்பீர். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். எடுத்த முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நிதிநிலை உயரும். அவசர கடன்களை அடைப்பீர்.
மீனம்:
மனதில் வெறுப்பும் குழப்பமும் உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் உண்டான பிரச்சனை விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |