பொதுவாகவே இந்த உலகில் இனம், மதம், மொழி மற்றும் பாலின வேறுபாடு இன்றி அனைவருக்கும் தேவைப்படும் ஒரு விடயம் தான் பணம்.
பணத்தை எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் யாருக்கும் இலகுவில் வருவது கிடையாது. அந்தளவுக்கு பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றதே தவிர ஒருபோதும் குறையாது.
பணத்தின் தேவையும் அதன் மீதான மோகமும் அனைவருக்கும் இருந்தாலும் பணம் அவ்வளவு எளிதில் யாரிடம் தங்கிவிடுவது கிடையாது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு குறைவே இருக்காது. இவர்களை தேடி பணம் வந்துக்கொண்டே இருக்கும். இப்படி பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள். அதனால் இவர்களுக்கு உலகத்து இன்பங்கள் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பு இயல்பாகவே அமையும். இவர்கள் உறுதியான மனநிலையும் விடாமுயற்சியும் கொண்டவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இதனால் இவர்கள் வாழ்வில் தேவைக்கு மிஞ்சிய பணம் இவர்களிடம் இருந்துக்கொண்டே இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே தவைமைத்துவ பண்புகள் அமைந்திருக்கும். இவர்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் வெற்றி பெறுவது நிச்சயம். இவர்களின் கடின உழைப்பால் இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. இந்த ராசியினரை தேடி பணம் வந்துக்கொண்டே இருக்கும்.
விருச்சகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயால் ஆளப்படுகின்றார்கள். அதனால் ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஈட்டும் பணத்தை இவர்கள் மிகவும் எளிமையாக சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்துக்கு பற்றாக்குறை வருவதே கிடையாது.