தெய்வீக ஆற்றல் கொண்ட பெண் ராசிகள்... இவர்களிடம் ஈர்க்கும் தன்மை இருக்குமாம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே தெய்வீக ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி தெய்வதத்தின் ஆசியையும் தெய்வீக சக்தியையும் கொண்டிருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்

இரக்க குணத்துக்கு பெயர் பெற்ற தெய்வீக ஒளிவட்டத்தைக் கொண்ட மிகவும் வெளிப்படையான ராசியாக மீன ராசி பெண்கள் அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் கற்பனையில் எதிர்காலம் குறித்த சரியாக கணிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்களிடம் மற்றவர்களை முதல் பார்வையிலேயே ஈர்க்கும் ஒரு முகவசீகரத்தன்மை மற்றும் தெய்வீக ஆற்றல் குடிகொண்டிருக்கும்.
தனுசு

தனுசு ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே ஒரு வசீகரிக்கும் ஆற்றலையும், மற்றவர்களை கட்டுப்டுத்தும் ஆளுமையையும் கொண்டிருப்பார்கள்.
இவர்களின் எதிர்காலத்தை பற்றிய கணிப்புகள் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். ஆன்மீக உண்மை மற்றும் உயர் உணர்வுநிலையின் கோளான குருபகவானின் ஆசியால் இவர்களுக்கு இந்த ஆற்றல் இருக்கும்.
விளையாட்டுத்தனமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றிருந்தாலும், அது ஆழ்ந்த நுண்ணறிவு கொண்டதாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் மர்மமான குணத்துக்கும் ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலே புரிந்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டுவதில்லை.
புதியவர்களுக்கு அவர்களின் தோற்றம் அச்சுறுத்துவதாக இருந்தாலும், அவர்களிடம் வசீகரிக்கும் மர்மமான, காந்த சக்தி மற்றும் ஒரு தெய்வீக ஆற்றல் நிச்சயம் இருக்கும்.