சனி பகவான் யாரை பிடிப்பார், யாரை பிடிக்கமாட்டார் தெரியுமா?
நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான்.
பொதுவாக சனியை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பார்கள்.
சனி பகவானின் தீய பார்வையில் இருந்து தப்பிக்க அவரது அருளை பெறுவது மிகவும் அவசியம்.
சிறந்த சிவ பக்தரான சனி பகவான் தன்னுடைய தவ வலிமையின் காரணமாக ஈஸ்வர பட்டம் பெற்றவர்.
இந்நிலையில், சனி பகவானுக்கு யாரை பிடிக்கும், யாரை பிடிக்காது என்று பற்றி பார்க்கலாம்.
யாருக்கு சனி பிடிக்காது?
நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை.
பாவ வினைகளுக்கு பரிகார மருந்தான பிரதோஷ வழிபாட்டை தடையின்றி செய்பவர்களை சனி பகவான் ஒருபோதும் தண்டிப்பதில்லை.
மேலும், அனுதினமும் சிவபூஜை செய்பவர்களை சனி பகவானுக்கு பிடிக்கும்.
சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப் படாதவர்களை சனி பிடிக்கும் காலத்திலும் பாவ மன்னிப்பு அளித்து பாதுகாப்பார் சனிபகவான்.
சத்தியம் தவறாதவர்கள் மனதில் மஹாலக்ஷ்மி நித்தியவாசம் செய்வாள். அந்த மஹாலக்ஷ்மி இருக்கும் இடத்தை சனி பகவான் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்.
நல்ல எண்ணம் வைத்து தினம் துதிப்பவரை சனி பகவான் நெருங்குவதே இல்லை.
வலம்புரி சங்கு இருக்கும் இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களுக்கு சனி பகவான் பாதிப்பை தருவதில்லை.
ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பிடிப்பதில்லை.
காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்த்துக் கொள்வார்.
யாரை சனி வேகமாக பிடிப்பார்?
மாற்றான் மனைவியை அபகரிக்க நினைப்பவர்களை சனி கண்டிப்பாக பிடிப்பார்.
அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் வீட்டிலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
தாய்க்கு அடங்காத பெண்கள், தகப்பனுக்கு அடங்காத மகன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.
உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவான் உடனே பற்றிக் கொள்வார்.
ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவான் உடனே அவர்களை பிடித்துக் கொள்வார்.
மேலும், குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலை சீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவானுக்கு பிடிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |