இன்றைய ராசி பலன் (27-02-2026)
மேஷம்:
இன்று முக்கியமான நாள். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக முக்கிமான முடிவுகள் எடுக்கும் நிலை வரலாம். உறவினர்கள் வழியாக முக்கியமான செய்தி வந்து சேரும். முக்கிய தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.
ரிஷபம்:
இன்று நண்பர்களிடம் தேவை இல்லாத விஷயங்கள் பேசாதீர்கள். உங்களை பற்றி சுற்றி உள்ளவர்கள் சில விமர்சனங்கள் வைக்கலாம். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்:
குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்குவாதம் உண்டாகும். வேலை ரீதியாக சந்தித்து வந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சனை விலகும்.
கடகம்:
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய குழப்பமும் பயமும் விலகும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு அதிகமாகும். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் சந்தித்த குழப்பங்கள் விலகும். தொழில் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சிலருக்கு வழக்கு விஷயங்களில் இருந்த குழப்பம் விலகும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.
கன்னி:
திருமணம் தொடர்பான பேச்சு நல்ல முடிவை பெரும். தந்தை ஆரோக்கியத்தில் நன்மை செய்யவேண்டும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
துலாம்:
மனதில் குழப்பமும் பதட்டமும் வந்து செல்லும். மனதில் இறைசிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
சொந்தங்கள் மத்தியில் இருந்த குழப்பங்கள் விலகும். எதிர்பாராத பணவரவு உங்கள் கைகளுக்கு வந்து சேரும். பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களை வந்து பேசுவார்கள்.
தனுசு:
மனதில் நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள்.
மகரம்:
சுற்றி உள்ளவர்களின் உண்மை முகம் அறிந்து கொள்வீர்கள். சிலர் தர்ம காரியத்தில் பங்கு கொள்வீர்கள். கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து வந்த குழப்பம் விலகும்.
கும்பம்:
நட்புகள் விரிவடையும். வேலை பளு அதிகரிக்கும். தேவை இல்லாமல் மனம் பதட்டமாக இருக்கும். மதியம் மேல் பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு முக்கியமான நாள்.
மீனம்:
பிள்ளைகள் தேவைக்காக சில விஷயம் செய்து கொடுத்து மகிழ்வீர்கள். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |