இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு அழகான வாழ்க்கை துணை அமைவார்களாம்
ஜோதிட ரீதியாக நாம் நிறைய விஷயங்களை கணித்து தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், நாம் எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை துணை மிகவும் அழகானவர்களாகவும் கவர்ச்சிகரமான நபராகவும் இருப்பார்கள் என்று பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரம் பொருத்தவரை அழகு என்பது சுக்கிரன் மட்டும் சந்திர பகவானை குறிக்கக்கூடியது.
ஆக, ஒரு ஆண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன் அல்லது சந்திரன் நின்றும், ஏழாம் அதிபதி சுக்ரன் அல்லது சந்திரன் வீட்டில் நின்றாலும் அந்த ஆணுக்கு ஒரு நல்ல அழகான அம்சமான மனைவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதே போல் தான் பெண்ணினுடைய ஜாதகத்திலும் லக்னத்திற்கு ஏழில் சுக்கிரன் நடந்த சந்திரன் நின்று ஏழாம் அதிபதி அதைப்போல் சுக்கிரன் எனது சந்திரன் வீட்டில் என்றாலும் பெண்களுக்கு ஒரு அழகான அம்சமான கணவர் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.
இந்த அமைப்பு கொண்ட ஜாதகங்களின் வாழ்க்கை துணை சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். எல்லோரும் மதிக்கக்கூடிய ஒரு வேலையை பார்க்கக் கூடியவராகவும் இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |