2026: நாளை ஆடிப்பிறப்பு அன்று இதை மட்டும் செய்ய மறக்காதீர்கள்

By Sakthi Raj Jul 16, 2026 06:04 AM GMT
Report

 தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. ஆடி காத்தடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்று முன்னோர்கள் கணித்து ஆடி பட்டம் தேடி விதை என்று நமக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

அப்படியாக, இந்த ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி ஞாயிறு போன்ற கிழமைகள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஆடி மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன நேரத்தில் ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கக்கூடிய முக்கியமான காரணத்தை பற்றி பார்ப்போம்.

2026: நாளை ஆடிப்பிறப்பு அன்று இதை மட்டும் செய்ய மறக்காதீர்கள் | Why Burning Coconut Is Important On Aadi 1St Day

ஆடிப்பிறப்பு என்று தேங்காய் சுடும் பண்டிகை மகாபாரத போர் உடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது, அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையே நடந்த மகாபாரதம் போர் ஆடி முதல் நாள் அன்று துவங்கி ஆடி 18 அன்று முடிவிற்கு வந்தது.

2026 எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு தலைவிதியே மாற போகிறதாம்

2026 எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு தலைவிதியே மாற போகிறதாம்

இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக ஆடி ஒன்றாம் தேதி மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து விநாயகர் மற்றும் அவர்களுடைய இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்து பூஜை செய்தனர்.

மேலும், பூஜையின் போது தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. மேலும், புதிதான திருமணம் தம்பதிகள் தீய எண்ணங்களை முழுமையாக அகற்றி நல்ல எண்ணங்களை விதைத்து மகிழ்ச்சியான வாழ்வினை துவங்கவும் செல்வ வளம் மற்றும் குடும்பத்தில் ஒற்றுமை பெருகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US