மீனாட்சி அம்மன் கையில் கிளி இருப்பதன் காரணம் தெரியுமா?
மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன்தான்.
மீனாட்சி அம்மன் தனது அருட்கருணை திருக்கண் பார்வையினாலே தமது பக்தர்கள் அனைவரையும் தோற்றுவித்து, வளர்த்து, காத்து வருகிறாள்.
கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன் கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள்.
இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு அருளாசியை பெற்ற பிறகுதான் சுந்தரேசுவரர் சன்னிதி சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கோலத்தை நினைத்தாலே அவரது வலது தோளில் இருக்கும் கிளியின் நினைவு நமக்கு வந்துவிடும்.
அன்னை மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.
மீனாட்சி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக் கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்கிறது.
அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டு இந்தக் கிளிதான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்குமாம்.
அதனால்தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்த கிளியின் மீதும் பக்தி கொண்டு இருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |