சனி பகவான் எதற்காக நமக்கு அதீத துன்பம் தருகிறார் தெரியுமா?
ஜோதிடத்தில் 9 கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆவார். அதோடு, சனி பகவானைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்று அவருக்கு ஒரு சொல்வாக்கியமும் உண்டு.
காரணம், சனி பகவான் மனிதனுக்கு எந்த நேரத்தில் எவ்வளவு பெரிய இன்பமும் துன்பமும் கொடுப்பார் என்று நமக்கு தெரியாது. அந்த வகையில் சனி பகவானைப் பார்த்து நாம் ஏன் இவ்வளவு பயம் கொள்கின்றோம்? அவர் நமக்கு அதீத துன்பம் கொடுத்து பாடம் கற்பிப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
சனி பகவானுக்கு தவம் செய்வதிலே அதிகம் நாட்டம் இருந்ததே தவிர்த்து அவர் இல்லறத்தை பற்றி சிந்திக்கவே இல்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.
விருப்பமே இல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட சனிபகவான், திருமணத்திற்கு பின்பும் தவத்தில் அதிக ஈடுபாடு செலுத்தினார். திருமணம் ஆசைகளும் கனவுகளோடும் இருந்த அவரின் மனைவி அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகவும் வேதனை அடைந்து சனிபகவானை சபித்துவிட்டாள்.
அதாவது, மனைவியின் ஆசையும், வேதனையும் புரிந்துக் கொள்ளாத கணவர் நீங்கள். தங்களின் தவ வலிமையின் ஆனந்தம் உங்களுக்கு கிடைக்காமல் போகட்டும் என்று சபித்துவிட்டாள். அதைக் கேட்ட சனிபகவான் மிகவும் மனம் உடைந்து போனார்.
அன்றில் இருந்து சனிபகவானின் பார்வை மிகவும் வக்கிரமாக மாறியது. அதில் இருந்து அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வரவே முடியவில்லை. மேலும், சனி பகவானின் உருவங்கள் பற்றி பல்வேறு விதமாக சொல்லப்பட்டு இருந்தாலும், சனி பகவான் நீதிக்கடவுள் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
சனி பார்வை ஒருவரின் கர்மவினையை போக்கவும் அவருக்கு சிறந்த பாடம் கற்றுக் கொடுக்கவே அமைகிறது. மேலும், இந்த உலகத்தில் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்பவருக்கு எந்த கிரகங்கள் பற்றிய கவலையும், பயமும் இருக்காது. அவர்கள் செய்த் தர்மம் இறுதி நொடியிலாவது அவர்களை காப்பாற்றும் என்று வருவதை எதிர்கொள்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







