இன்றைய ராசி பலன்(22-07-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். உடலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி செல்லும். நன்மையான நாள்.
ரிஷபம்:
நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். வேலைக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல வெற்றியைக் கொடுக்கும்.
மிதுனம்:
இன்று எதிர்காலம் பற்றியக் கவலையும் பயமும் வரும். வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் திடீர் முடிவுகளை எடுக்காதீர்கள். தாய் வழி உறவால் ஆதரவு கிடைக்கும். வெற்றிக் காணும் நாள்.
கடகம்:
வேலை பளுவிற்கு ஆளாவீர். உங்கள் உழைப்பால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும். வரவை விட செலவு அதிகரிக்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். தொழிலில் மிகப் பெரிய லாபமும் புதிய வடிக்கையாளரையும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகள் விலகுவார்.
கன்னி:
நீங்கள் செய்யும் வேலைகளில் சில இடையூர்களை சந்திக்கலாம். மாணவர்களின் திறமை மேம்படும். மனதில் உண்டான குழப்பங்கள் விலகி செல்லும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
துலாம்:
இன்று மிகவும் சோர்வான நாள். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். வரும் எதிர்ப்புர்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
புதிய வேலைகளில் கவனம் தேவை. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.
தனுசு:
இன்று பிள்ளைகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீண் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மகரம்:
நேற்று பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
கும்பம்:
இன்று வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான புதிய நட்புகளை சந்திக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நல்லது. கவனமாக செயல் பட வேண்டிய நாள்.
மீனம்:
இன்று வாழ்க்கையில் புரிதலும் தேடுதலும் நிறைவாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். இறைவழிபாடு நன்மை செய்யும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







