உங்கள் ரகசியத்தை மறந்தும் இந்த தேதியில் பிறந்தவர்களிடம் மட்டும் சொல்லாதீர்கள்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மேலும், எண் கணிதம் கொண்டு ஒருவரின் ஆளுமை, அவரின் குண நலன்கள், வாழ்க்கை அமைப்புகளை நாம் எளிதாக சொல்லி விடமுடிடியும்.
அந்த வகையில் எந்த தேதியில் பிறந்த நபருடன் நாம் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் மறந்தும் நம் ரகசியத்தை சொல்லக்கூடாது என்றும் பார்ப்போம். அதாவது, எண் கணித்தபடி ஒரு சில தேதியில் பிறந்த நபர்களுடன் நாம் ரகசியத்தை பகிர்ந்துக் கொள்ளும் பொழுது மிகவும் கவனமாகவும் ஆழ்ந்து சிந்தித்த பிறகே சொல்ல வேண்டும்.
அதாவது, ஒரு சிலர் நம்முடன் நம்பிக்கையாக பழகுவது போல் மிகவும் போலியாக நடித்துக் கொண்டு இருப்பார். நம்மிடம் இருந்து உண்மைகளை வாங்கிக் கொண்டு அவர்கள் அதை நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள்.
அப்படியாக, எண் கணித்தபடி 5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள் பிறரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அதோடு, அவரிடம் பகிரும் ரகசியத்தை அடுத்தவர்களிடம் சொல்வதில் அவர்களுக்கு எந்த ஒரு கூச்சமும் இருக்காது.
அதனால் இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நன்மை அளிக்கும். அடுத்ததாக 8, 17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்களும் ஒருவரிடம் கேட்கும் ரகசியத்தை பாதுக்காக்கும் குணம் வைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் ரகசியமாக வைப்பது போல் இருந்துக் கொண்டு சமயம் பார்த்து அதை அந்த நபருக்கே எதிராக பயன் படுத்துவார்கள்.
இவர்களைப் போல் 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்களும் ரகசியத்தை பாதுகாப்பாக வைக்கமாட்டார்கள். இவர்கள் பொதுவாக யாரையும் நட்பாக பார்த்து பழகும் குணம் கொண்டு இருக்க மாட்டார்கள். அதனால் இவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் ரகசியத்தை அவர்கள் பொருட்டாக மதிக்காமல் பிறரிடம் பகிர்ந்து விடுவார்கள். அதனால், இவர்களிடம் பேசும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







