இன்றைய ராசி பலன்(26-07-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அலுவலகத்தில் உங்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
ரிஷபம்:
சிலருக்கு வெளியூர் சென்று வேலை பார்க்கும் நிலை உருவாகலாம். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். உணவு பழக்கத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
நட்பு வட்டாரம் விரிவடையும் நாள். கடந்த கால தவறுகளை எண்ணி மனம் வருந்துவீர்கள். ஒரு சிலருக்கு உறவினர்களால் சில தொந்தரவுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
இன்று குழந்தைகள் நலனில் முழு அக்கறை செலுத்த வேண்டிய நாள். இறைவழிபாட்டில் மனம் ஆர்வம் கொள்ளும். மதியம் மேல் எதிர்பார்த்த செய்திகள் தேடி வரும்.
சிம்மம்:
இன்று உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விலகி செல்லும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். முன்னோர்கள் வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும். நன்மையான நாள்.
கன்னி:
இன்று மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் திறமை வெளிப்படும். வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்தவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
துலாம்:
இன்று உடல் நிலையில் உண்டான சங்கடங்கள் விலகி செல்லும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகம் ஆகும். உங்களை பற்றி விமர்சித்தவர்கள் விலகி செல்வார்கள். முன்னேற்றம் காணும் நாள்.
விருச்சிகம்:
இன்று சிலருக்கு குலதெய்வம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத கணவன் மனைவி சண்டைகள் உருவாகலாம். பணத்தட்டுப்பாடு விலகும். உடல்நிலை சீராகும்.
தனுசு:
பல வருடமாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். தாய் உடல்நிலையில் முன்னேற்றம் காணும் நாள்.
மகரம்:
இன்று உங்கள் குடும்பத்தில் மூன்றாம் நபரால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். சொந்த விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மனதில் தெளிவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
கும்பம்:
ஒரு சிலருக்கு வேலையில் சந்தித்த தொந்தரவுகள் விலகி செல்லும். நீண்ட நாட்களாக கைக்கு வரவேண்டிய பணம் கைகளுக்கு வரும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.
மீனம்:
இன்று மனதில் தெம்பும் தைரியமும் பிறக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம் ஒன்று நிறைவேறும். நன்மையான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







