கருடபுராணம்: மனிதன் இறந்த பிறகு பசுவை தானம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?
இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் அல்ல. பிறந்தால் இருந்தாகவேண்டும் என்பது தான் நியதி. மேலும், மனிதன் பிறக்கும் பொழுதும் இறக்கும் பொழுதும் அவனுக்கான மரியாதையை நாம் சகமனிதர்களாக செலுத்த வேண்டும்.
அப்படியாக, ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் எமலோகத்திற்கு செல்லும் வேளையில் அவன் நிறைய சிரமங்களை சந்திக்க நேர்கிறது. அதாவது எமலோகம் செல்லும் வழியில் வைதரணி நதியில் தண்ணீருக்கு பதிலாக, ரத்தமும் மலமும் சிறுநீறும் ஓடுவதாவாக சொல்லப்படுகிறது.
மேலும், அதில் இருக்கும் கூர்மையான பற்களை கொண்ட பூச்சிகள் இறந்த ஆன்மாவை கண்டிப்பதாக சொல்கிறார்கள். பூமியில் இறந்த மனிதர்கள் எமலோகம் செல்லும் பொழுது மிகுந்த துன்பத்தை அனுபவிப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் வாழும் உயிரினங்கள் இறந்த ஆன்மாவிற்கு மிகுந்த துன்பத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். மேலும், இந்த துன்பத்தில் இருந்து விடுபட ஆன்மாவிற்கு ஒரு வழி இருப்பதாக கருடபுராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதாவது, அந்த நதியை அவர்கள் எளிதாக கடக்க பசு இருப்பது அவசியம் என்கிறார்கள். பசுவின் வாலை பிடித்துக்கொண்டு நாம் எளிதாக கடந்து விட முடியும் என்கிறார்கள். அவ்வாறு கடக்கும் பொழுது ஆன்மாவிற்கு எந்த துன்பமும் இல்லாமல் கடக்க முடிகிறது என்கிறார்கள்.
அதனால் ஒருவர் இறந்த பிறகு பசுவை தானம் செய்வதால் அவர்கள் அந்த பசுவை கொண்டு எளிதாக கடக்கமுடியும் என்று கருடபுராணம் சொல்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |