கோவிலுக்கு சென்றால் சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும்: ஏன் தெரியுமா?

By Yashini Apr 29, 2024 02:30 PM GMT
Report

கோயிலுக்குச் சென்றால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டும் என்றது நம் முன்னோர்கள் சொல்லிகுடுத்த வழக்கம்.

தினமும் கோயிலுக்குச் செல்வது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்குச் சென்று விட்டு வருவது என்பது பலரது வழக்கம்.

கோயிலில், குறிப்பாக பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, உட்கார்ந்தால் மகாலட்சுமி அங்கேயே தங்கி விடுவாள். நமக்கு அதிர்ஷ்டம் வராது என பலரும் தவறாக நினைத்து, கோயிலில் அமராமல் நேராக வீட்டுக்கு வந்து விடுவார்கள். 

இது முறையான பிரார்த்தனை கிடையாது. இப்படி வந்து விடுவதால் நம்முடைய பிரார்த்தனையும் பலனற்றுப் போகும்.

கோவிலுக்கு சென்றால் சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும்: ஏன் தெரியுமா? | Why You Have To Sit For A While When Go To Temple

அப்படி கோயிலுக்குச் செல்பவர்கள் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து விட்டு புறப்படும் வழக்கம் உள்ளது. 

காலம் காலமாக இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. கோயிலுக்குச் சென்றால் சிறிது நேரம் உட்காந்து விட்டுதான் வர வேண்டும் என பெரியோர்களும் சொல்வார்கள்.

கோயிலுக்குச் சென்றால் அமைதியை கடைபிடித்து, இறை சிந்தனையுடன் மட்டும் இருக்க வேண்டும்.

சுவாமி தரிசனம் முடித்த பிறகு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு, அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர வேண்டும்.

இனியாவது, கோயிலுக்குச் சென்றால் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சிறிது நேரம் கோயிலில் அமைதியாக அமர்ந்து பின் வீட்டுக்குச் செல்வோம்.

   ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US