இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் குணம் கொண்டவர்களாம்
மனிதனுக்கு பிடிவாத குணம் என்பது கட்டாயம் இருக்கக் கூடாது. அதாவது இந்த பிடிவாதம் என்பது வாழ்க்கையில் சாதனை செய்வதற்கு தேவையானது என்றாலும் சில நேரங்களில் பிடிவாத குணமானது நம் வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் சந்திக்க கூடிய ஒரு நிலையை கொடுத்து விடுகிறது.
அதாவது நாம் தேவை இல்லாத விஷயங்களுக்கு பிடிவாதம் கொண்டு இருப்பதால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நிறைய பாதிப்புகள் உருவாகிவிடும். அப்படியாக குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்களுக்கு இயற்கையாகவே பிடிவாத குணம் சற்று அதிகமாக இருக்குமாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

கடகம்:
சந்திர பகவானின் ஆதிக்கம் பெற்ற கடக ராசியினருக்கு எப்பொழுதும் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும். இவர்களை நெருங்கியவர்கள் இவர்களுடைய சொல் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஒரு தலைமைத்துவ பண்பும் இவர்களிடத்தில் நாம் பார்க்கலாம். ஆனால் எவ்வளவு தூரம் இவர்களுடைய பிடிவாதம் இவர்களுக்கு முன்னேற்றம் கொடுக்கிறதோ, அதே அளவிற்கு இவர்களுடைய பிடிவாதமே இவர்களுக்கு வாழ்க்கையில் சில சிக்கல்களையும் கொடுத்து விடுகிறது. அதனால் கடக ராசியில் பிறந்த பெண்களிடம் நாம் சற்று விட்டுக் கொடுத்து செல்வது அவசியம் ஆகிறது.
விருச்சிகம்:
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு தாங்கள் சொல்வது மட்டுமே சரி என்ற ஒரு எண்ணம் இருக்கும். அதை போல் இவர்களிடத்தில் ஞானமும் சற்று அதிகமாகவே பார்க்கலாம். விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் ஒரு விஷயத்தை மனதில் நினைத்து விட்டார்கள் என்றால் பிடிவாதம் கொண்டு அந்த விஷயத்தை சாதித்து விடுவார்கள். ஆனால் அதேபோல் ஒருவரிடம் பேச வேண்டாம் என்று நினைத்து பிடிவாதம் கொண்டாலும் பேசாமல் அவர்கள் பல காலம் இருந்து விடுவார்கள். ஆனால் விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் கட்டாயமாக இந்த பிடிவாதம் குணம் மட்டும்தான்.
கும்பம்:
சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட கும்ப ராசியினர் யாருடைய பேச்சையும் அவ்வளவு எளிதாக கேட்டு நடக்க மாட்டார்கள். இவர்களுக்கு என்று ஒரு தனி வழி அமைத்து நடக்கக்கூடிய அமைப்பு பெற்று இருப்பார்கள். அதே சமயம் இவர்களை ஒரு விஷயத்திற்கு சரி என்று அவர்கள் குடும்பத்தினர் சொல்ல வைப்பதற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதாவது கும்ப ராசியினர் அவர்களாக முன்வந்து ஒரு விஷயத்தை சரி என்று ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த விஷயம் நடக்கும். நாமாக சென்று அவர்களை எந்த ஒரு காரியத்திற்கும் மனம் ஒப்புக்கொள்ள வைக்க முடியாது. ஆதலால் பிடிவாத குணத்தால் இவர்களுக்கு வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகள் எடுப்பதில் சங்கடங்கள் உருவாக்குவதை பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |