ஆன்மீகம்: பெண்கள் கட்டாயமாக செய்யக்கூடாத 5 விஷயங்கள்
ஆன்மீகம் என்பது மக்களை வழிநடத்தி செல்லக்கூடிய ஒரு பாதை ஆகும். அப்படியாக ஆன்மீகத்தில் ஒரு சில விஷயங்களை பின்பற்றலாம் என்றும் பின்பற்றக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது, அந்த வகையில் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட சில 5 விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அந்த விஷயங்களை அவர்கள் செய்யும் பொழுது அவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சில பாதிப்புகளை சந்திக்க கூடும் என்று சாஸ்திரங்கள் சொல்லப்பட்டு உள்ளது. ஆதலால் அந்த விஷயங்கள் செய்வதை அதை அவர்கள் முற்றிலுமாக தவிர்ப்பது அவர்களுடைய வாழ்க்கைக்கு நன்மையை சேர்க்கும் என்கிறார்கள். அப்படியாக பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு 5 விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.

1.ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. அவர்கள் எவ்வளவு பெரிய வேண்டுதல்கள் வைத்தாலும் அந்த பெண் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் சிதறு தேங்காய் உடைப்பது சாஸ்திர ரீதியாக தவறு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதை அவர்கள் கணவன் கைகளில் கொடுத்து உடைக்க சொல்லலாம்.
2. வீடுகளில் திருஷ்டி கழிக்கும்போது பெண்கள் அவர்கள் கைகளால் பூசணிக்காய் எடுத்து உடைக்கக் கூடாது. ஆண்கள் மட்டுமே பூசணிக்காயை வைத்து திருஷ்டி சுற்றி கழிக்க வேண்டும்.
3. திருமணமான பெண்களுக்கு திருமாங்கல்யம் எவ்வளவு முக்கியமானததோ அதேபோல் அவர்கள் காலில் அணியக்கூடிய மெட்டியும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆதலால் திருமணமான பெண்கள் கட்டாயம் அவர்களுடைய கால்களில் மெட்டி அணிவதும் நெற்றியில் குங்குமம் வைப்பதும் அவசியமாக இருக்கிறது. அவர்கள் வெறும் நெற்றியாக எப்பொழுதும் இருக்கக் கூடாது.
4. திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு தர்ம காரியங்களையும் அவர்களுடைய கணவனுக்கு தெரியாமல் செய்வதை தவிர்க்க வேண்டும். தர்மம் புண்ணியத்தை சேர்க்க கூடியது என்றாலும் அதை கணவனுக்கு தெரியாமல் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
5. மேலும் சுமங்கலி பெண்கள் ஒரு பொழுதும் தங்களுடைய இறந்த தாய் மற்றும் தந்தைக்காக அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைவதற்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபாடு செய்தல் கூடாது. ஆனால் அவர்கள் தங்களுடைய தாய் தந்தைக்கு படையல் போட்டு அவர்கள் பெயரால் தானங்கள் செய்து வழிபாடு செய்யலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |