எதிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ளும் 3 ராசிகள்
மனிதர்களுக்கு நேர்மை என்பது மிகச்சிறந்த குணமாகும். ஒரு மனிதனுடைய அடிப்படைத் தன்மை மிகச் சிறந்ததாக இருந்தால் அவன் இயல்பாகவே நேர்மையான மனிதனாகவும் உண்மையான மனிதராகவும் இருக்கின்றான்.
சிலருக்கு ஜோதிட ரீதியாகவும் அவர்கள் நேர்மை குணம் கொண்ட மனிதர்களாக வாழ்வார்கள். அதாவது ஜோதிடத்தில் ஒரு சிலர் ராசிகள் நீதி, நேர்மை, நியாயம் என்று பின்பற்றி வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பார்கள். அப்படியாக எந்த ராசியினர் மிகவும் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
சிம்மம்:
சிம்ம ராசி பொறுத்தவரை அவர்கள் எதையும் தைரியமாக எதிர்த்து போராடும் குணம் கொண்டவர்கள். ஆதலால் அவர்களுக்கு ஒரு விஷயத்தை மறைத்து தனக்கு ஒன்றை சாதகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. எந்த ஒரு நிகழ்வாக இருக்கட்டும் உண்மையை பேசி போராடி விடுவோம் என்று அவர்கள் மிகத் தெளிவாகவும் தைரியத்தோடும் இருப்பார்கள். நேர்மையாகவும் உண்மையாக வாழாத மனிதன் கோழை என்று எண்ணக்கூடிய நபராக சிம்ம ராசியினர் இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசி எடுத்துக் கொண்டால் அவர்களுடைய ராசியின் சின்னமே தராசு. இவர்கள் எதையும் சரியாக எடை போட்டு ஒரு விஷயத்தை செய்ய நினைப்பார்கள். அதேபோல் துலாம் ராசிக்கும் எதையும் நுணுக்கமாகவும் சரியாகவும் கவனித்து சம நிலையில் ஒரு விஷயத்தை அணுகி நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படக்கூடிய ஒரு மனிதராக இருப்பார்கள். இவர்களை எவ்வளவு அழுத்தம் கொடுத்து பொய் பேச சொன்னாலும் இவர்களால் பொய் பேச முடியாது.
தனுசு:
தனுசு ராசி பொருத்தவரை மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள். இவர்கள் எதற்கு பின்னாலும் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காதவர்கள். எதுவாக இருப்பினும் அதை பேசி சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆதலால் தன் மீது தவறு இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு உண்மையாக நடந்து அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மிக நேர்மையாக இருக்கக்கூடிய நபர்கள். அதேபோல் இவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் அதை திருத்திக் கொள்ள தயங்க மாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







