உலகின் மிகப்பெரிய 10 இந்து கோயில்கள்
உலகின் பிரம்மாண்டமாகவும், அற்புதமான கட்டட கலை உடைய 10 இந்து கோயில்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அக்ஷர்தாம் கோயில், டெல்லி
100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் 10,000 ஆண்டுகள் பழமையான கலாச்சராம், ஆன்மீகத்தை கட்டிடக்லை சித்தரிக்கிறது. இந்த கோயில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
அங்கோர் வாட் கோயில், கம்போடியா
இது விஷ்ணுவின் மிகப்பெரிய இந்து கோயிலாகும். சிம்ரிப் நகரில் மீகாங் ஆற்றின் கரையில் கட்டப்பட்ட இந்த கோயில், கெமர் கட்டிடக்கலையின் பழமையை காட்டுகிறது.
அண்ணாமலையர் கோயில், திருவண்ணாமலை
அண்ணாமலையர் கோயில் 1,01,171 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோயில்களில் ஒன்றாகும்.
பெலூர் மடம், மேற்கு வங்கம்
ஹூக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பேலூர் மடம் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது. இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சை
1000 ஆண்டு பழமையான தஞ்சை பெரியக்கோயில் சிவபெருமானுக்கு கட்டப்பட்ட மிகப்பெரிய இந்து கோயில். இந்த கோயில் யுனெஸ்கோவால் உலக பாரம்பாரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்புகேஷ்வர் கோயில், திருச்சி
திருச்சி திருவானைக்காவல் கோயில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோயில். 6ஆம் நூற்றாண்டில் இந்த திருத்தலம் கட்டப்பட்டுள்ளது.
ஏகாம்பரேஸ்வர் கோயில், காஞ்சிபுரம்
காஞ்சி ஏகாம்பரேஸ்வர் கோயில் பிரதிபெற்ற சிவன் கோயில். இந்த கோயில் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி
திருநெல்வேலியில் அமைந்துள்ள இந்த கோயில் சுமார் 71,00 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்
சிவபெருமானின் கோயிலான இது 1,06,000 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
ஸ்ரீரங்கம், திருச்சி
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீரங்கம் உலகின் இராண்டவது பெரிய கோயிலாகவும் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |