102 அடியில் இலங்கை பார்த்தபடியே உருவாகும் பிரமாண்டமான ராமர் சிலை
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் புண்ணிய பூமியாக பார்க்கப்படுகிறது. அதாவது இராமாயண கால வரலாற்று தொடர்பு கொண்ட ஒரு அற்புதமான இடமாகவும் காசிக்கு நிகரான புனித தலமாக ராமேஸ்வர ராமநாதசுவாமி ஆலயம் விளங்குகின்றது. ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அவர்களுடைய பாவங்கள் போக்குகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ராமேஸ்வரம் தாலுகா சங்குமால் எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கைலாய ஈஸ்வர் ஆலயம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதம் சுமார் 42 அடி உயரத்தில் சமுத்திர வேல்முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் கவனத்தை பெற்று இருக்கிறது.
இப்போது ராமர் இலங்கையை பார்த்தபடியே சுமார் 102 அடி உயரத்தில் சிலை ஆனது அமைக்கப்பட உள்ளதாக அக்கோவில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இங்கு அமைக்க இருக்கின்ற 102 அடி ராமர் சிலைக்கு "சேது ஸ்ரீ ராமர்" என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், 102 அடியில் சிலை அமைக்கும் பணிகள் கட்டாயம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து அடுத்த ஆண்டு திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ராமேஸ்வரம் ஏற்கனவே ஒரு சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாகவும் இருக்கிறது.
தற்பொழுது 102 அடி சிலையுடன் ராமர் சிலை வர இருப்பதை தொடர்ந்து இன்னும் கூடுதல் சிறப்புகள் பெற்று மக்களின் கவனத்தை ஈர்க்க கூடிய இடமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |