108 எண்ணில் நிறைந்திருக்கும் அதிசயங்களும் ஆச்சிரியங்களும்
By Sakthi Raj
படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது. பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

- வேதத்தில் 108 உபநிடதங்கள்.
- பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பது போல சைவ, வைணவ திவ்ய க்ஷத்திரங்கள் 108.
- பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
- பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
- நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108 அர்ச்சனையில்
- 108 நாமங்கள் ,அரசமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை
- சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
- ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன. தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
- திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
- ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும்.
- இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
- மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
- முக்திநாத் க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
- உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
- உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
- குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
- மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
- 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது. "1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்? ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த (1+0+8: 5+4 : 2+7)எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 37 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US

