இன்றைய ராசிபலன் (26-08-2026)

Report

மேஷம்:

இன்று வீடுகளில் எதிர்பார்த்த விஷயங்கள் கைக்கூடி வரும். பிள்ளைகள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். தாயார் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்:

நீண்ட நாட்கள் முடிவுக்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும். மற்றவர்களுடைய ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.

மிதுனம்:

இன்று பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கடகம்:

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சி கைகூடும்.

சிம்மம்:

எதிர்பாராத நபரை சந்திப்பீர்கள். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நாளாக அமையப் போகிறது. மனநிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

கன்னி:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அடமான பொருட்களை மீட்டெடுப்பீர்கள்.

துலாம்:

இன்று பொது வாழ்க்கையில் உங்களுடைய செல்வாக்கு உயரும். உடலில் ஒரு விதமான சோர்வை சந்திப்பீர்கள். உறவினர்களுடைய வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்.

விருச்சிகம்:

அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவை பெறுவீர்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். மாணவர்களுக்கு உடற்கல்வி தொடர்பான முயற்சிகள் கைகூடிவரும்.

தனுசு:

கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் வழியே தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

2026: இரட்டை புதன் பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது

2026: இரட்டை புதன் பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது

மகரம்:

வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த விஷயங்கள் நல்ல முடிவை தரும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்:

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது அவசியம். குழந்தைகள் வழியில் எதிர்பாராத அலைச்சல் வரலாம். விவசாய பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மீனம்:

குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சிந்தனைகளில் இருந்து குழப்பங்கள் விலகும். வரவுக்கு ஏற்ற செலவுகளை வைத்துக் கொள்வது அவசியம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US