நாளைய ராசி பலன் (01-05-2026)

Report

மேஷம்:

ஒரு சிலருக்கு வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கும்.

ரிஷபம்:

வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். தேவையில்லாமல் உங்கள் குடும்ப விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மருத்துவ ரீதியாக சந்தித்த குழப்பங்கள் விலகும்.

மிதுனம்:

ஒரு சிலருக்கு தந்தையுடன் வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பொழுது போக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்:

உங்கள் குடும்பத்தில் இருந்த வந்த மனக்கசப்புகள் விலகும். வியாபாரம் தொடர்பாக சில முக்கியமான முடிவு எடுப்பீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு குடும்பத்தில் ஆதரவு கொடுப்பார்கள்.

2026: சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

2026: சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

சிம்மம்:

உறவினர்களிடையே சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

கன்னி:

திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். பொருளாதார விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும் நாள். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்ய வேண்டிய நாள். சிலருக்கு திடீர் செலவுகள் வரலாம். சிலருக்கு கடன் சுமை குறையலாம்.

விருச்சிகம்:

கலை துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக இருக்க போகிறது. வாழ்க்கை துணையுடன் இருந்த வந்த மன கசப்புகள் விலகும். தாய் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு:

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் விலகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பரிசு பொருட்கள் வந்து சேரும்.

இந்த 4 ராசிகளை சமாளிப்பது எப்பொழுதும் கஷ்டமாம்.. ஏன் தெரியுமா?

இந்த 4 ராசிகளை சமாளிப்பது எப்பொழுதும் கஷ்டமாம்.. ஏன் தெரியுமா?

மகரம்:

காதல் வாழ்க்கையில் சந்தித்த குழப்பங்கள் விலகும். அரசியல் வாழ்க்கையில் இருந்த வந்த குழப்பங்கள் விலகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய திடீர் யோகம் கிடைக்கும். தொழில் நுட்பம் ரீதியாக உங்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். காவல் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகம் தெரியாதவர்களிடத்தில் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொல்லாதீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US