இன்றைய ராசி பலன்(30.09.2024)

Report

மேஷம்

வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உழைப்பாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

ரிஷபம்

வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.நினைத்த வேலைகள் நடந்தேறும்.உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும்.குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.

மிதுனம்

தடைகளைத்தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.அன்றாடப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கடகம்

பணிபுரியும் இடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். தெளிவுடன் செயல்படுவீர்.உங்கள் பேச்சாற்றல் இன்று உங்களுக்கு கை கொடுக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

அரசியல் வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பேற்படும்.எந்த வகையிலும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்.அனுசரித்துச் செல்வதாலும் திட்டமிட்டு செயல்படுவதாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும்.

ஒரே கருவறைக்குள் இரண்டு சக்தி வாய்ந்த அம்மன்

ஒரே கருவறைக்குள் இரண்டு சக்தி வாய்ந்த அம்மன்


துலாம்

தின வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும்.உங்கள் விருப்பம் இன்று எளிதாக பூர்த்தியாகும். நட்பின் ஆதரவால் மனம் தெளிவடையும்.

விருச்சிகம்

பிறரை அனுசரித்துச் செல்வீர்கள். புதிய வாடிக்கையாளரால் வியாபாரம் லாபம் தரும்.அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.

தனுசு

பணிபுரியும் இடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்டிருந்த வேலைகளைத் தடையின்றி முடிப்பீர்.பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்.

மகரம்

மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.நிதானமாக செயல்படுவதால் சங்கடங்கள் குறையும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்

உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.கூட்டுத் தொழில் லாபமடையும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மீனம்

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி லாபம் உண்டாகும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US